FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 14, 2012, 07:15:01 PM
-
மனதை மயக்கி
மதியை கெடுக்குமாம்
சிந்தனை சிதறி
நிதானம் தவறி
நிம்மதியை கெடுக்கும் மது
துயரத்தை மறக்க
இன்பத்தில் மிதக்க
அருமருந்தாம் மது
சுயநினைவில்லாத நிலையில்
அனுபவிக்கும் எந்த இன்பமும்
ஒரு இன்பமா?
கனவில் நாம் அடையும்
இன்பத்துக்கும் இதற்கும்
வித்தியாசம் தான் என்ன?
மது மனதையும் விஷமாக்கி
உடம்பையும் விஷமாக்கி
நிம்மதியை, சந்தோஷத்தை
சிறுக சிறுக கொல்லும்
SLOW POISON அல்லவா மது
கோவிலாக இருக்கும் மனதை
குப்பை மேடாக மாற்றி அங்கே
கோபம் தாபம்
காமம் குரோதம்
போன்ற அரக்கர்களை
குடியமர்த்தும் சர்வாதிகாரி அல்லவா
மது
-
thamizh yaar antha mathu sollavey ila
any way super lines
-
yaanai than melaye man alli potukurathu pola than "kudi"makkalum