FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: AshiNi on April 28, 2018, 12:06:21 AM

Title: பாசத்தின் சிகரம் என் தந்தை
Post by: AshiNi on April 28, 2018, 12:06:21 AM
(https://s18.postimg.cc/r5mqveyu1/appa.jpg)

கண்களில் வண்ணங்களோடு
 முத்தாய் சிரித்த பிஞ்சு மொட்டோ நான்!
அண்டத்தில் இனியோர் சொர்க்கம்
 எங்குண்டு என தம்மை மறந்து
பண்பாடிய தந்தையும் மகளும் நாம் ...

வானமே எல்லை
 தந்தையின் அன்பிற்கு
வேறின்பம் இல்லை
 மகளவளின் மனதிற்கு

கருவறை வாசம் முடிந்து
 மண்ணைத் தொடும் மகளிற்கு
கருவறை முடிந்தால் என்ன?
 இனி என் மனவறை உண்டென
அள்ளி அணைக்கும்
 அன்னை உள்ளம் அப்பா!

தத்தித் தவழ்கையிலே
 பிஞ்சுப்பாதம் நடை பயில்கையிலே
மகளின் கொலுசின் ஓசை போல்
 வேறோர் இன்னிசை அறியா
கலை ரசிகன் அப்பா!

பள்ளி செல்லும் சாலையிலே
 துள்ளி மகள் ஓடுகையில்
அன்பென்ற கைவிலங்கால்
  மகள் கரம் பற்றி
அரவணைத்துச் செல்லும்
 பாதுகாப்பு குடை அப்பா!

உறவுகள் நிந்திக்கும் வேளையிலும்
 மகளவள் பாதையில் முட்கள்
சந்திக்கும் வேளையிலும்
 நானிருக்க கலங்காதே என
தன் பாதங்களில் மகள் பாதங்களை
 தாங்கி சுமைகளை
சுகமாய் ஏற்கும் ஆலமரம் அப்பா!

கன்னியாய் மாறி அவள்
 காதல் கொண்டிடினும்
தன் தந்தையே அவள்
 கண்கள் கண்ட முதல் வீரன்...

காதல் முத்தத்தை விட
 மகளின் பஞ்சுக் கன்னங்களை
இனிக்கும் கன்னலாய் எண்ணி
 தந்தை கொடுத்ததே
கன்னியவள் பிறப்பினில் பெற்ற
 சிறந்த முதல் முத்தம்...

வாழ்வெனும் நாட்டியத்தில்
 ஆடிக் களைத்தாரோ
என் உயிருக்கு விதை விதைத்த
 என் தந்தை ?

என் கண்களின் வண்ணங்களை
 கறுப்பு வெள்ளையாய் மாறச்செய்து
எங்கே மறைந்து சென்றாரோ?

வடியும் கண்ணீர்த்துளிகளுடன்
 அண்ணார்ந்து பார்க்கிறேன்...
விண்ணில் தெய்வத்தின் திருவடியில்
 தேவராய் இருந்து
மகளைப் பார்த்து உருகும்
 பூமுகத்தை இன்றும் காண்கிறேன்...

Title: Re: பாசத்தின் சிகரம் என் தந்தை
Post by: joker on May 01, 2018, 03:01:10 PM
கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க வைத்த வரிகள்
தாயை பற்றி நிறைய கவிதைகள் படித்திருப்போம்
தந்தையை பற்றி தங்களின் வரிகள் அருமை சகோதரி

ஒரு மகளின் பார்வையில் தந்தை

கருவறை வாசம் முடிந்து
 மண்ணைத் தொடும் மகளிற்கு
கருவறை முடிந்தால் என்ன?
 இனி என் மனவறை உண்டென
அள்ளி அணைக்கும்
 அன்னை உள்ளம் அப்பா!

தந்தையை நினைக்கையில் வார்த்தைகள் இல்லை என்னிடம் ஊமையாகி போனேன்  :(

நன்றி 

Title: Re: பாசத்தின் சிகரம் என் தந்தை
Post by: AshiNi on May 02, 2018, 08:32:49 PM
[highlight-text]
[highlight-text]கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க வைத்த வரிகள்
தாயை பற்றி நிறைய கவிதைகள் படித்திருப்போம்
தந்தையை பற்றி தங்களின் வரிகள் அருமை சகோதரி -
Ungal paaraattukkal kandu mikka magizhchi adaigiren...Mikka nanri Joker bro[/highlight-text] 
[/glow][/color][/font]