FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on March 14, 2012, 05:06:39 PM
-
படித்ததில் பிடித்தது!
வாழ்க்கையை வாழத்தானே வந்துள்ளோம்
வா
இந்த வாழ்க்கையை வென்றுபார்ப்போம்
வழுக்குப்பாறையின்மேல்
ஏறுவதுபோல்தான் வாழ்க்கை
வழுக்கிவிடுமேயென்று
நீ வலுவிழந்தால்
வாழ்வை தொடங்குவது எப்போது?
துயரங்களை கண்டு துவண்டு விழுந்தால்
நீ சிகரங்களை தொடுவது எப்போது?
கவலையே எனக் கலங்கிகொண்டிருந்தால்
கண்ணீருக்கு ஓய்வுகொடுப்பது எப்போது?
கண்களில் தூசி விழத்தான்செய்யும்
அதற்காக யாரும்
கண்களை கட்டிக்கொண்டு
நடப்பதில்லையே!
புனிதபூமியில் பிறந்தவிட்டபின்னே
புழுதிகளைகண்டு அஞ்சலாமா?
பிறக்கும்போது எவருமே
ஏற்றத்தாழ்வோடு
பிறப்பதில்லை ஒருதுளி நீரில்
வெளிவருகிறோம் -இதில்
விதிவிலக்கில்லை
வேதனைகளா?
அதை ”வெற்றி”லையாக்கி
சுருட்டி மடி துவட்டித் துப்பு
வெற்றியின் காரம் உள்ளிறங்கி
வேதனையின் இலை
வெளியில் விழட்டும்.
மனதில் இருள்சூழ்ந்துவிட்டதேயென
கண்களைமூடிக்கொண்டால்
வெளிச்சம் வருவது எப்படி?
ஒளிக்கு வழிவிட்டு விழிகளை திற-
உன் உள்ளத்திற்குள்
வெளிச்சம் வேகமாக பரவட்டும்.
விழுந்துவிட்டோமே என
வெக்கப்பட்டுகிடந்தால்
எழுவது எப்போது?
எழுந்துவா தோழமையே!
இலக்கைதொட ஏணியில்லையேயென
நினைத்து மனதை தளரவிடாதே -உன்
துணிவைக்கொண்டு
ஒரு தோனியை உருவாக்கி
அதில் உறுதியோடு துடுப்புபோட்டு –உன்
இலக்கைநோக்கிப்புறப்படு
தூரம் தூரம் என்று நினைத்தால்
தொடும் விரல்கூட தூரமாகிப்போகும்
அருகே எனநினைத்துப்பார்!
உலகவிவரம்
உன் விரல்நுனியில் வந்தடையும்.
குட்டைநீராய் கிடந்து-உனை
நீயே சிறைபடுத்திக்கொள்ளாமல்
அருவி நீராய் பாய்ந்துவா
அதிலிருந்து
தெளிந்த நீரோடையாய் ஓடு
சிலர் கல்லெறிந்து கலக்கலாம்-சில
சாக்கடைகள் சேரலாம் அதையெல்லாம்
சரிசெய்து
சுத்தப்படுத்திக்கொண்டே சுறுசுறுப்பாய் ஓடு
ஆங்காங்கே இளைப்பாறிக்கொள்
அப்போதுதான்
சலைக்காமல் செல்வாய்
வாழ்க்கைமுழுவதும் வெல்வாய்....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேரி இன்பம் பெறுவாய்.
-
தன்னம்பிக்கையை வளர்க்கும் நல்ல கவிதை யோசப் நன்றிகள்
-
நன்றி ஏஞ்செல்!
-
nice lines
-
நன்றி சுதர் அண்ணா!
-
nalla kavithai usf
pagirvukku nantri
ovvoru varigalum thannambikaiya valarkura mari iruku
-
நன்றி ரெமோ மாம்ஸ்!
பாராட்டுக்கள் இந்த கவிதையை எழுதிய சகோதரி மலிக்கா அவர்களுக்கு!