FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on March 14, 2012, 02:31:58 PM

Title: மறந்துபோனதேனோ ??
Post by: supernatural on March 14, 2012, 02:31:58 PM
உன் அழகான நினைவுகள்...
என் மனதை அலங்கரித்து..

 உன் நினைவுகள் நிதர்சனமாய் ...
எனக்கே என  ..என் சிறு மனம் ...
அகங்கரித்தது....

அகங்கரித்தும் என் மனதை அன்பாய் ..
அழகான உன் மனம் அங்கீகரித்தது ...

தூரம் பல கடந்து இருந்தாலும் ...
துளி கூட காரமோ ..பாரமோஇல்லாது ...
உன் தித்திக்கும் நினைவுகள் ...

கொஞ்சம் கனவாக சில நேரங்களிலும் ..
நெஞ்சில் நீங்கா  நினைவாக பல நேரங்களிலும் ...
என் மனதை..நிஜமாய் ..நிலையாய் ,,,நிறைவாய் ...
ஆட்கொள்கிறது...

உன்னை எண்ணி ...
அடங்கிடா காதலுடன் ...
துடி துடிக்கிறது ...
என் இதயம்...

இருந்தும் ஒரு பெரும் கலக்கம் ...

நீ அறிந்த என் மனம்...
உன்னை அறிய ...புரிய...
மறந்துபோனதேனோ ????.
Title: Re: மறந்துபோனதேனோ ??
Post by: Global Angel on March 14, 2012, 04:03:30 PM
Quote
நீ அறிந்த என் மனம்...
உன்னை அறிய ...புரிய...
மறந்துபோனதேனோ


நல்ல கவிதை .... ஆழமான காதல் ... தன்னிலை விளக்கம் இல்லாதவங்க போல அவங்க ,,
Title: Re: மறந்துபோனதேனோ ??
Post by: suthar on March 15, 2012, 01:10:00 AM
nature nice lines
Title: Re: மறந்துபோனதேனோ ??
Post by: Dharshini on March 16, 2012, 02:34:20 AM
romba nala kavithai nature
Title: Re: மறந்துபோனதேனோ ??
Post by: RemO on March 21, 2012, 09:19:11 AM
Nice one natural (F)