FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on April 12, 2018, 10:28:25 AM

Title: ~ குறிப்புகள் பலவிதம்: சளித்தொல்லையைச் சமாளிக்க! ~
Post by: MysteRy on April 12, 2018, 10:28:25 AM
குறிப்புகள் பலவிதம்: சளித்தொல்லையைச் சமாளிக்க!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2F2018%2FHEALTH%2Ftip.jpg&hash=1411567eef25d963b8e3fedb90e1c4e3be8ee15e)

# குளிர்க்காலத்தில் மிளகு சேர்க்கப்பட்ட காய்கறி சூப்பை அடிக்கடி குடித்து வந்தால் தொண்டைப் புண், வறட்டு இருமல், சளித் தொந்தரவு ஆகியவை குணமாகும்.

# தினமும் இரண்டு துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் குளிர்காலம் சம்பந்தமான எந்த நோயும் அண்டாது.

# சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் விபூதியை தண்ணீரில் குழைத்து நெற்றி, முக்கு, கண்ணின் கீழ்ப்பாகம் ஆகிய இடங்களில் பற்று போட்டால், முகத்தில் கோத்திருக்கும் அதிகப்படியான நீர் வற்றிவிடும். மூக்கடைப்பு, சளித்தொல்லை நீங்கும்.

# இஞ்சி சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சம அளவில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சளியும் இருமலும் மூன்றே நாட்களில் காணாமல் போய்விடும்.

# குளிர்க்காலத்தில் கால்களில் ஏற்படும் வெடிப்பைத் தவிர்க்க தினமும் இரவில் உறங்கும் முன் பாதங்களில் ஆலிவ் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம். வேப்பிலை, மருதாணி, மஞ்சள் மூன்றையும் அரைத்துப் பூசினாலும் பாத வெடிப்பு குணமாகும்.