காதல் எனும் இனியவள்
(https://media.giphy.com/media/dmZyTBrDX4ETB7fR6y/giphy.gif)
ஆதாம் ஏவால் அன்று கொண்ட பந்தம்,
காதல் எனும் பெயர் கொண்ட
காரிகையை ஈன்றதோ?
அவள் வந்தபின்னர் தான்
விண்ணும் மண்ணும்
அழகாய் உறவாடியதோ !
காற்றும் மழையும் கதை பேசியதோ !
காதல் கன்னியவள் கண்ணியமாய்
பவனி வரக் காரணம் என்னவாம் ?
பிரிவினையென்ற ஒன்று
என்னிடம் இல்லை கண்ணேயென்று
கண்ணடித்தாள் என்னைப் பார்த்து...
சிந்தித்துப் பார்த்தேன் ஒரு கணம்
அது உண்மையே என
உணர்ந்தேன் மறு கணம்
வனப்பை பாரவில்லை
ஜாதியை கோரவில்லை
அந்தஸ்து கேட்கவில்லை
பட்டமும் தேடவில்லை
உண்மைக் காதலரிடையே காதலவள்
அப்படித்தானே குடி கொள்வாள்
அவள் வானிலே மிதக்கும்
ஜோடிகள் மாத்திரமே
உணர்வர் என் அர்த்தம்...
உன் இதயத்தில் அரியாசனமிட்டு
அமர்கையிலே நீயும் ருசிப்பாய் தோழியே
என் ரசனை..........
உயிராகி உடலாகி உறவாகி
உன் காதலுடன் மௌனம் பேசுகையில்
அறிவாய் காதலவள் வாசனை..........
காதல் பேதமறியாது என
ஊரார் சொல்லக் கேட்டவள்,
கவி தொடுக்கையிலேயே உணர்ந்துவிட்டேன்.
வார்த்தைகள் வெளிவர மறுக்கிறது
காதல் வெள்ளம் விழிகளில் நிறைய
என் பேனையும் தலை குனிகிறது...