FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 13, 2012, 08:32:53 PM

Title: காத்திருப்பு.
Post by: aasaiajiith on March 13, 2012, 08:32:53 PM
பத்தே பத்து  நாட்கள் தான் பதிக்கவில்லை
புதிதாய் ,பதிலாய் பதிப்பு ...

பித்தே பித்து பிடித்தவன் போல் சித்தம்
முழுதும்  சத்தமாய்  பெரும் தவிப்பு

அறிந்தே ,பதிப்புக்களை பதிக்கவில்லையே தவிர
பதிந்த பதிப்புக்களை ஒரு நாளும் படிக்க மறந்ததில்லை

பதிப்புகளை பதிப்பதற்க்கு புத்தம் புதிதாய்
பல புதுமுகங்கள் ,ஆரோக்கியமான வளர்ச்சிதான்

அத்தனை பேர் அழகாய் வரி பதித்தும் கூட
கவிச்சோலையில் நல்வரிகளின் வறட்சி ஏன் ??

எத்துனைதான் வரி பதிந்தும், அதை எத்துனை முறை படித்தும்
தெள்ளதெளிவாய் தெரிகிறதே தரத்தின் தளர்ச்சிதான்

ஒருவேலை மறுசுழற்சியின் மறு பிரவேசத்தில்
பெறக்கூடுமோ ? அரும் , நறும்  மறுமலர்ச்சிதான் ?

காத்திருப்போம், காத்திருப்போம்
கவிச்சோலையில் வரும் காலத்தில் குறிபிட்டதோர்
அரும் கிளர்ச்சி ,தோன்றினால் பெரும் மகிழ்ச்சிதான் .....
 
Title: Re: காத்திருப்பு.
Post by: ஸ்ருதி on March 13, 2012, 11:30:02 PM
மிக்க மகிழ்ச்சி மீண்டும் உங்கள் பதிவுகளை தந்தருக்கு
உங்களை போல கவிநடையில் எழுத நான் முயற்சி செய்து தோல்விதான் மிச்சம்  :)
Title: Re: காத்திருப்பு.
Post by: Dharshini on March 14, 2012, 02:34:37 AM
பத்தே பத்து  நாட்கள் தான் பதிக்கவில்லை
புதிதாய் ,பதிலாய் பதிப்பு ...( ungaluku 10 naal than enagaluku yugamaga alava irunthathu ungal pathipai paaramal  yen epdi seithirkalo theriya villai

பித்தே பித்து பிடித்தவன் போல் சித்தம்
முழுதும்  சத்தமாய்  பெரும் தவிப்பு ( ungal kavithaigalai padikamal nangal alava epdi agivitom


Title: Re: காத்திருப்பு.
Post by: supernatural on March 14, 2012, 12:42:20 PM
ஆசையின் பதிப்பை ..
ஒவ்வொரு நாளும் ஆசையாய் ..
எதிர்பார்த்திருந்தேன் ...
ஏமாற்றம் தான் மிச்சம் ...
.
உங்கள் எழுத்துகளை...
அழகிய  பதிப்புகளை...
நாங்கள் (நான்)..காத்திருந்தேன் ...

 உங்கள் மறுவரவு  கண்டேன்..
மனதில் பெரும் மகிழ்ச்சி ..
பதிப்பை படித்தேன்...
ரசித்தேன்...

உங்களுகே உரிய..
அழகிய தமிழ்....
அருமையான  நடை..
மறுவரவுக்கு..புதுவரவுக்கு ...
மிக்க நன்றி !!
Title: Re: காத்திருப்பு.
Post by: suthar on March 15, 2012, 12:54:21 AM
பத்து நாட்களுக்கு பின்
புதிதாய் பொருள்ப்படும்படியாய்
பதிபிட்ட படைப்பே
பல புதிய ரத்தங்களின்  கவிசோலையின்
பதிப்பில் மறுசுழற்சியில் மெருகூட்டலாம் என்று
பண்பாய் கூறிடும் பண்பே

சித்திரமும் கை பழக்கம்
செந்தமிழும் நா பழக்கம் என்பது போல் உன்
செம்மொழி காணாது
சித்தம் கலங்கி காத்திருந்த வேளையில்
தவமாய் தவத்தின் பலனாய்
வரமாய் கிடைத்தது காத்திருப்பு.
Title: Re: காத்திருப்பு.
Post by: RemO on March 21, 2012, 10:16:37 AM
ada pongapa elam ipadi kavithailaye reply kodutha enai mari kavithai elutha theriyathavanga ena seiya
Title: Re: காத்திருப்பு.
Post by: suthar on March 21, 2012, 09:38:21 PM
hhahaah remo ethayachum ezhuthu....
nanga ena therinja ezhuthurom....