FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on March 13, 2012, 03:12:01 PM
-
படித்ததில் பிடித்தது!
கொடுப்பது குற்றம்-இதைவிட
வாங்குவது மாபெரும் குற்றம்
இதுவே இந்தியாவின் சட்டம்-ஆனால்
கொடுக்காதோர் கொடுமைக்கு ஆளாகிறார்கள்
கொடுப்போர் விரும்பிக் கொடுப்தில்லை
மன வேதனையோடுக் கொடுக்கிறார்கள்
இதையறிந்தும் வாங்கி மகிழ்கிறார்கள்
ஆண்களில் சில அறிவீனர்கள்!
ஆத்திரமடையாதீர் தோழர்களே!
அறிவுப்பூர்வாமாக ஆராய்ந்து பாருங்கள்
ஆணுக்கு பெருமை சேர்பது பெண்களே!
பெண்ணைப் பேதையென நினைப்பது மடமையே!
வாங்கியது போதும் வாலிபர்களே!
இறைவனுக்குப் பயந்து
இம்மை மறுமையை நினைத்து
இன்றே இப்பொழுதே வரதட்சணையை கைவிடுவீர்!
வெறுக்கக் கூடிய வரதட்சணை
பெண்களை வருத்தக்கூடியது வரதட்சணை!
வாழப்போவது மனைவியுடன் தான்!
வாங்கிய வரதட்சணையுடன் அல்ல!அல்ல!
-புதுமடம் இப்ராஹீம் (ஜித்தா)
-
வெறுக்கக் கூடிய வரதட்சணை
பெண்களை வருத்தக்கூடியது வரதட்சணை!
வாழப்போவது மனைவியுடன் தான்!
வாங்கிய வரதட்சணையுடன் அல்ல!அல்ல!
கவிதை நன்று யோசுப் ..
-
நன்றி ஏஞ்செல்!
-
mams:S ipalam ponuga varathatchai ketkuranga
ini ithai pasangaluku sathagama edit panu mams
-
இந்த கவிதையை மாத்துனா எளுதுனவரு கோவிச்சிக்க போறாரு மாம்ஸ்!
நன்றி ரெமோ மாம்ஸ்!
-
apa eluthinavara matha solu mams :D