FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on March 13, 2012, 12:39:54 PM
-
நிலமும்
நீயும்
ஒன்றேயடி.
என் ஜீவனை சுமப்பதால்!
நீரும்
நீயும்
ஒன்றேயடி.
ஆழம் தெரியவில்லை!
காற்றும்
நீயும்
ஒன்றேயடி.
உரசும் போது சிலிர்த்து விடுகிறேன்!
வானும்
நீயும்
ஒன்றேயடி.
முதலும் முடிவும் தெரிவதில்லை !
நெருப்பும்
நீயும்
ஒன்றேயடி.
கண்களால் தொடமுடிந்தும் …..
கைகளால் முடியவில்லை!!!
-
pen imboothathil matum illai anu
paarkkum ethilum pen irukiraal
-
nice anu
nala comparison