FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 22, 2018, 10:59:47 AM
Title:
காதல் சுகமானது
Post by:
thamilan
on
March 22, 2018, 10:59:47 AM
நகம் கடித்து
விரலின் சதை கடிபடுவது தெரியாமல் ,
எதிரே வருவது
நீதான் என் தெரியும் வரை....
காதல் சுகமானது
எட்டாக மடித்து
நீ தரும் கடித்தில்
என்னவென்று அறியும் வரை
இதயம் படபடக்குமே
காதல் சுவையானது
எல்லோரும் உறங்கிய பின்னே
யாருக்கும் தெரியாமல்
நான் மட்டும்
கண்விழித்து அரைகுறை இருட்டில்
உன் இதயம்
கடிதமாய் என்னுடன் பேச
காதல் இதமானது
நீ உடுத்தி வரும்
உடை நிறத்தையே நானும் உடுத்திவர
சந்தோஷத்தால் புன்னகை பூத்து
செல்லமாக சிணுங்குவாயே
காதல் இனிமையானது
Title:
Re: காதல் சுகமானது
Post by:
ரித்திகா
on
March 25, 2018, 01:30:10 PM
(https://media.giphy.com/media/z01OMTSQbEjw4/giphy.gif)
வணக்கம் தமிழன் சகோ ...
காதல் என்றும் சுகமானதுதான் !!!
வரிகள் அழகு ...
காதலின் உணர்வுகளை
பிரதிபலிக்கிறது ....
வாழ்த்துக்கள் !!!
நன்றி !!!