FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 22, 2018, 10:54:31 AM

Title: அறிவுக் கனி
Post by: thamilan on March 22, 2018, 10:54:31 AM
ஏதேன் தோட்டத்தில்
எல்லா கனிகளயும் அனுபவிக்க‌
ஆதாம் ஏவாளுக்கு
உரிமை கொடுத்து
ஒரு கனியை மட்டும்
உண்ண‌
தடை விதித்தான் இறைவன்

அந்தக் கனி
அறிவுக்கனி
இறைவனால் விலக்கப்பட்ட கனி

அந்த‌க் கனியை உண்டதால்
நன்மை தீமைகளை
அறிந்தான் மனிதன்

அறிவுக்கனியை உண்ணுமுன்பு
நிர்வாணமாக இருந்த மனிதன்
உண்ட பின்பு
தங்கள் நிர்வாணத்தை அறிந்து
இலை தளைகளால்
நிர்வாணத்தை மறைத்தார்கள்
அறிவு அவர்கள் மனதில்
கள்ளத்தை உண்டாக்கியது

பகுத்தறிவு பெறாத‌ வ‌ரை
குழ‌ந்தைக‌ள் ஆன‌ந்த‌மாயிருக்கின்ற‌ன‌
அறிவு வ‌ள‌ர வ‌ள‌ர‌
ஆனந்தம் மறைந்து
கவலைகள் வளரத் தொடங்குகின்றன‌

க‌ள்ள‌ம் க‌ப‌ட‌ம்
சூது பொறாமை
பொய் துரோக‌ம் சுய‌ந‌ல‌ம்
இவை அனைத்தும்
அறிவு ம‌னித‌னுக்கு க‌ற்றுக்கொடுத்த‌
பாட‌ங்க‌ளே

அறிவு
அக‌ங்கார‌த்தை வ‌ள‌ர்க்கிற‌து
அறிவு
அழிவை உற்ப‌த்தி செய்கிற‌து

அறிவுக்க‌னியை உண்டால்
நீங்க‌ள் ம‌ர‌ண‌ம‌டைவீர்க‌ள் என‌
இறைவ‌ன் கூறிய‌தாக‌
பைப‌ள் கூறுகிற‌து

அந்த‌ ம‌ர‌ண‌ம்
ஆன்மாவின் ம‌ர‌ண‌ம்
ப‌ண்புக‌ளின் ம‌ர‌ண‌ம்
ம‌னித‌நேய‌த்தின் ம‌ர‌ண‌ம்

இந்த‌ அறிவு
இன்று
அதைத் தானே செய்கிற‌து
Title: Re: அறிவுக் கனி
Post by: ரித்திகா on March 25, 2018, 02:03:46 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.bakarasgreyhounds.fr%2Fbarre-de-fleur-orange.gif&hash=d79079c7d1bf538e7344501e3ae007cae90b0d8d)

வணக்கம் தமிழன் சகோ ..!!!

'' அந்த‌ ம‌ர‌ண‌ம்
ஆன்மாவின் ம‌ர‌ண‌ம்
ப‌ண்புக‌ளின் ம‌ர‌ண‌ம்
ம‌னித‌நேய‌த்தின் ம‌ர‌ண‌ம்

இந்த‌ அறிவு
இன்று
அதைத் தானே செய்கிற‌து''

நிதர்சனமான வரிகள் சகோ ...
தொடரட்டும் கவிப்பயணம் ...
வாழ்த்துக்கள் ..