FTC Forum
General Category => வேலை வாய்ப்பு - JOB OPPORTUNITIES => Topic started by: Yousuf on March 12, 2012, 11:43:41 AM
-
வெளிநாட்டில் வேலை என்று ஒரு வாய்ப்பு வருகிறது என்றால் உடனடியாக நாம் அந்த நிறுவனம் உண்மையானதுதானா என்று சோதிப்பது எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwinmani.files.wordpress.com%2F2011%2F06%2Fforeginjob.jpg%3Fw%3D455&hash=6541f2b24d86a569e7e8428401b8dce4b9da145d)
பல ஏஜென்சிகள் மூலம் தினமும் பத்திரிகையில் நாம் படிக்கும் செய்தி வெளிநாட்டு வேலை வாய்ப்பு நேரடி முகாம் உடனடியாக செல்ல விருப்பம் உள்ளவர் என்று தொடர்புகொள்ளுங்கள், இப்படி வரும் செய்திகளில் பல நம்பகத்தன்மை இல்லாத நிறுவனங்களாகவே இருக்கிறது, ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கிறது என்றால் அந்த நிறுவனம் உண்மையானது தானா என்பதை நமக்கு தெரிவுபடுத்து மத்திய அரசின் ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.poeonline.gov.in
கொத்தனார் முதல் மெக்கானிக்கல் என்ஜினியர் வரை , எலக்ட்ரிசன் முதல் கம்ப்யூட்டர் என்ஜியர் வரை அனைவருக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்று வரும் செய்திகளை மட்டுமே நம்பி பல பேர் வெளிநாடுகளுக்கு சென்று கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர், ஒரு நிறுவனம் அல்லது அந்த நிறுவனத்தின் ஏஜென்டிடம் இருந்து விளம்பரம் வரும் போது அந்த நிறுவனம் இந்தியாவில் அனுமதி பெற்றுள்ள நிறுவனமா என்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம், மேலே குறிப்பிட்டு இருக்கும் மத்திய அரசின் தளத்திற்கு சென்று நாம் இடது பக்கம் இருக்கும் RA Information என்பதில் நம் மவுஸ்-ஐ கொண்டு சென்றதும் வரும் Sub menu -வில் நிறுவனத்தின் பெயர் , RC Number , ஏஜெண்ட் பெயர் என்று மூன்று விதமாக நாம் தேடலாம் , விளம்பரத்தில் அவர்கள் எந்த பெயர் மற்றும் RC Number கொடுத்துள்ளனரோ எதை வைத்து வேண்டுமானாலும் நாம் தேடி அந்த நிறுவனம் உண்மையானது தானா , இந்திய அரசின் அனுமதி பெற்றுள்ளதா என்பதையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம் , வெளிநாட்டு வேலைக்கும் செல்ல இருக்கும் நபர்களுக்கு இந்தப்பதிவை கொண்டு சேர்ப்பது நம் நண்பர்களின் கடமை.
-
Thanks for sharing usuf machi....... :) :)
-
நன்றி ஜாவா மச்சி!