FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on March 17, 2018, 12:09:57 PM
-
இன்னுமின்னும் கொஞ்சம்கூட கலையாத
உன் மௌனத்தினுள் ஊடுருவி
உன் மொத்த மௌனத்தையும்
வாரி சுருட்டி திரட்டி எடுத்து
என் இதயப் பரிசோதனைக்குள் வைத்து
என் புத்தியிடம் பேசினேன்
அது சொன்னது..
உன் செவிகள் திறந்தே உள்ளதாம்..
அப்படியென்றால்...
என்னுடைய வார்த்தைகள் இடைவிடாது
உன்னை வந்தடைய வந்தடையவே
உன் மௌன நீளம் கூடிக் கொண்டிருக்கிறதோ..?
சரி என் வார்த்தைகளையும் நான்
நிறுத்திக்கொள்கிறேன்...
ஆனால்,
இதே_நிலை_தொடர்ந்தால்..
நம்மையொட்டி ஒரு உலகப்போரல்ல
ஒரு ஊனப்போர் வந்துவிடுமோ..
என்ற அச்சம்தான் என்னை
கதிகலங்க வைக்கிறது