FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on March 15, 2018, 05:16:14 PM

Title: ★ஆயுதக் கவிதை★
Post by: Guest on March 15, 2018, 05:16:14 PM

ஏ வாள்முனையே
என் கூர்முனையே

தமிழைக் காதலிக்கச் செய்ததில்
நீயும் ஓர் ஆதாரம்

நீதானே எந்தன் கூடாரம்

நீ சிந்தும் கவிதானே என்றுமென் ஆகாரம்

கர்ப்பக்கிருகத்திலிருந்து
அற்ப கிரகத்திற்கு
வெளி வந்த நாள் முதல்
எங்கு நோக்கினும் ஆயுதம்

அம்பு முதல் அமிலம் வரை ஆயுதம்
ஈட்டி முதல் தோட்டா வரை ஆயுதம்
வெடிகுண்டு முதல் அணுகுண்டு வரை ஆயுதம்

இலக்கணம் முதல் இலக்கியம் வரை
வாழ்க்கை முதல் வரலாறு வரை

பேனா கண்டிடாத ஞானமா
புலவன் விளம்பாத தத்துவமா

கவிஞனுக்கு நீயே ஆயுதம்
Title: Re: ★ஆயுதக் கவிதை★
Post by: NiYa on March 15, 2018, 07:51:31 PM
அர்த்தமான வரிகள்