FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KrisH on March 15, 2018, 01:14:22 AM

Title: அறிமுகமானவன்
Post by: KrisH on March 15, 2018, 01:14:22 AM
அறிமுகமானவன்

நலம் விசாரித்தவர்களை
நலம் விரும்பிகள் என எண்ணினேன்.

அன்பாய் பேசியவர்களை
அன்பு கொண்டவர்கள் என எண்ணினேன்.

நன்றாய்  பழகியவர்களை
நண்பர்கள் என்று பாவித்தேன்
மறவாமல் மனதினில் கொண்டேன். 

பேச வந்தவர்களிடம் நேரமின்றியும்
மறு  நொடியினில் பேசினேன்.

உதவி என்று கேட்டவர்களிடம்
தெரியாது எனினும் முயற்சிக்காமல்
விட்டதில்லை.

காலம் சுழன்றது

நான் பேச தேடினேன்
எங்கும் அமைதி.
பார்த்தும் பாராமுகம்

உதவி என்று தட்டினேன்
நிசப்தம்

வினாவினேன்
பதில் கூற யாருக்கும் நேரமில்லை.

பாவம் எந்திர வாழ்க்கையில்
பம்பரமாய் சுழலும் மனிதர்கள்
என இரக்கம் கொண்டேன்.

இருந்தும் மனம் கொள்ளவில்லை
வினாவினேன்  நான் யாரென்று?

ஒரு குரல்  தந்தது பதில்
"அறிமுகமானவன் "
அதிகம் அறிமுகமில்லா
ஒரு சொல்
பதிலாய் அறிமுகமானது.

அறிமுகமாகி அது நாள் வரை
நான் அறிந்தவற்றை
அறிமுகம் இல்லாமல் செய்தது.

நேரமில்லை அவர்களுக்கு என்று
நினைத்து இருதேன்,
எனக்கு ஒதுக்க நேரமில்லை
என்று உணர்ந்தேன்.

பேசினார்களே அவர்களாய் அன்பாய் ,
ஆவலாய்  என்று நினைத்து இருந்தேன்.
பேசினார்கள் அவர்கள் நேரம் கடத்த,
பொழுதுபோக்காய் என்று உணர்ந்தேன்.

உதவி என்றால் தேடி வரும்
அளவுமுக்கியமானவன்
என்று நினைத்து  இருந்தேன்.
உதவி என்றல் தான் நினைவில்
வந்தேன் என்று உணர்ந்தேன்.

நான் கொண்ட பிம்பங்கள்
எல்லாம் ஒற்றை சொல்லில்
உடைய கண்டேன்.

எல்லோரையும் நண்பர்களாய்,
அன்பு கொண்டவர்களாய்
எண்ணியது தவறா!

தேவைக்காக மட்டும்
பயன்படுத்தி கொண்டது
அவர்கள் தவறா!

போதும் மாறிவிடு என்றது
அனுபவம்.
மாறாதே விட்டு விடு என்றது
மனம்.

ஏன் என்றேன் ?

"இது தான் உலகம்" என்றது.......
Title: Re: அறிமுகமானவன்
Post by: joker on March 15, 2018, 12:15:28 PM
எதையும் எதிர்பாரா அன்பு
தாயை தவிர வேறொருவரில்
கிடைக்க பெற்றால் அவர்கள்
பாக்கியசாலிகள்

நம் அன்பு அது அவர்களுக்கு
புரியும் நேரம் நாம்
அகன்றிருப்போம் அவர்களிடமிருந்து
வெகு தூரம்

"தொடர்ந்து எழுதுங்கள் நண்பா "




Title: Re: அறிமுகமானவன்
Post by: KrisH on March 15, 2018, 12:24:43 PM
நன்றி ஜோக்கர் :)
Title: Re: அறிமுகமானவன்
Post by: ரித்திகா on March 16, 2018, 06:11:45 AM
கவிதை அருமை சகோ !!!

வாழ்த்துக்கள் ...
தொடரட்டும் பயணம் ..
வாழ்த்துக்கள் !!!
Title: Re: அறிமுகமானவன்
Post by: KrisH on March 16, 2018, 09:27:55 AM
நன்றி ரித்திகா
Title: Re: அறிமுகமானவன்
Post by: DoRa on March 17, 2018, 01:45:37 AM
nice kavithai duck...........
Title: Re: அறிமுகமானவன்
Post by: KrisH on March 17, 2018, 01:52:39 AM
Dora frnd thanks....