FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on March 12, 2018, 08:09:20 PM

Title: வாழ்க்கை
Post by: Guest on March 12, 2018, 08:09:20 PM
நேசம் பற்றி நிறைய பேசியாயிற்று..

நேசம் கொன்று பல்லிளிக்கும் துரோகத்தையும்
அவ்வப்போது கடந்து வந்தாயிற்று..

உறவுகள் எதுவும் நிலைப்பதில்லை..
நிலையாததுப்பற்றி கவலைக் கொள்ளவும்
இப்போதெனக்கு நேரமிருப்பதில்லை..

முடிந்து போன எவ்வுறவையும் பின் தொடர்வதாயில்லை..
இம்முறை அவற்றை என்னால் மீட்டெடுக்கவும்
முடியாதென தோன்றுகிறது..

கடந்தகால நினைவுகளிலும்
வருங்கால பயங்களிலும்
சிக்கித் தவிக்கிறது
வாழ்க்கை..

இப்போதெனக்கு
தேவைப்படுவதெல்லாம்
யாருமற்றதொரு தனிமை தான்..

முகமூடிகள் அலுத்து விட்டன..
முகமூடிகளற்று கூட்டத்தின் நடுவே நிற்கவும் சஞ்சலமாயிருக்கிறது..

ஒரு புன்னகை
ஒரு நேசம்
ஒரு அரவணைப்பு
ஒரு நம்பிக்கையென
உங்களிடமிருந்து எதுவுமே வேண்டாம்..

எல்லாவற்றுக்காகவும் காத்திருக்க வேண்டியிருக்கிறது..
காத்திருப்புக்களெல்லாம் ஏமாற்றத்தையே கொண்டு வருகிறது..

முன்னெப்போதோ
கைவிட்டு வந்த கரங்களை
தேடிச் செல்கிறேன்
நான்..

இப்போது..
அதனை
வேறு யாரோ
பற்றிக் கொண்டிருக்கிறார்கள்..

அவ்வளவுதான் வாழ்க்கை
Title: Re: வாழ்க்கை
Post by: joker on March 12, 2018, 08:39:47 PM
கடந்தகால நினைவுகளிலும்
வருங்கால பயங்களிலும்
சிக்கித் தவிக்கிறது
வாழ்க்கை..

இப்போதெனக்கு
தேவைப்படுவதெல்லாம்
யாருமற்றதொரு தனிமை தான்..

அருமையான வரிகள் சகோ
நிதர்சனம் ஒவ்வொரு வரிகளும்
Title: Re: வாழ்க்கை
Post by: NiYa on March 15, 2018, 07:54:08 PM
"இப்போதெனக்கு
தேவைப்படுவதெல்லாம்
யாருமற்றதொரு தனிமை தான்

அழகான நான் உணர்ந்த வரிகள் தோழா
அருமை