கனா காண்பேன் ஒரு நாள்
கனவுகள் இல்லா மனிதன் உண்டே
தன் வாழ்வை பற்றிய கனவுகள் இல்லா மனிதன் உண்டே
இல்லை என்றது உலக நியதி
நம்பினேன் கண்ணாடி விம்பத்தில் என்னை காணும் வரை
கனவுகள் இல்லாத மனிதனா?!!!
வியப்பின் ஆச்சரிய குறி
ஆசைகள் கொண்டால் தானே கனவு வரும்
ஆசைகள் அனைத்தும் நிராசையாக
கனவுகள் காணும் முன்னே கானல் நீராய் போக கண்டதனால்
ஆசை கொள்ள அச்சம் கொண்டேன்
என்னை நோக்கி பாயும் கேள்விக்கனைகள்
பதில் கூற பதில் தேடினேன்
ஆசை கொண்டால் தானே பதிலும் கிடைக்கும்
கனா கண்டேன் மறுபடியும்