FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on March 08, 2018, 03:57:35 PM
-
பெண்ணே
நீ மலராகவும் மலர்வாய்
நீ தென்றலாகவும் வருடுவாய்
நீ புயலாகவும் வீசுவாய்
உன்னில் தாய்மை உண்டு
அதில் மென்மையும் உண்டு
புரிந்தவர்களுக்கு
நீ ஒரு அழகான காவியம்
புரியாதவர்களுக்கு
நீ ஒரு விடை தெரிய புதிர்
உன் மௌனம்
சிலருக்கு வரம்
பலருக்கு சாபம்
பெண்ணே
உன் மனம் முழுமையாக
படித்திட இவ்வுலகில்
யாரும் பிறந்திடவில்லை ..
எனவே
பெண்ணே
உன்னக்கு நிகர் நீ மட்டுமே ..
சமூகமே
பெண்ணை
பூ என்று சொல்லாதே
அது காலையில் மலர்ந்து
மாலையில் இறந்து விடும்
பெண்ணை
புள்ளி மான் என்று சொல்லாதே
அது வேட்டைக்காரனிடம்
சிக்கி இறந்து விடும்
பெண்ணை
மீன் என்று சொல்லாதே
அது மீன் வலையில்
மாட்டி இறந்து விடும்
பெண்ணை
ரத்தம் ,சதை
உயிர் ,உணர்வு
உள்ள ஒரு ஜீவனாய்
சக மனுஷியாய்
நினைத்தால் மட்டும் போதும் ...
தாய்மை ஒன்றையே
போதும்
பெண்ணின் பெருமை சொல்ல
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
-
சோக்கி..பெண்ணின் பெருமையை இவ்வாறெல்லாம் சொல்லி புல்லரிக்க வைச்சிட்டீங்க ....
அருமையான படைப்பு நண்பா ......
வாழ்த்துக்கள் ......
-
நன்றி இசையா :)
-
அழகான வரிகள்
பெண்ணை
ரத்தம் ,சதை
உயிர் ,உணர்வு
உள்ள ஒரு ஜீவனாய்
சக மனுஷியாய்
நினைத்தால் மட்டும் போதும்""
அநேக பெண்கள் ஏங்குவது இதற்காக தான்
பல ஆண்கள் இதை புரிவது இல்லை
புரிந்தால் போதும்
கவி அருமை