FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on March 05, 2018, 06:23:46 PM
-
சிரித்துக்கொண்டேயிருந்த ஷாம்
இதோ "சிரியா" மல் தவிக்கிறது
அதோ கைகளும் கால்களும் இழந்த
ஒரு ஃபலஸ்தீனச்சிறுவன்
சிரியக்குழந்தையைப்பார்த்து
அழுகிறான்..
நீ என்ன பாவம் செய்தாய்
என்கிறது அவன் கண்ணீர்...
.
கொடூரம் என்றால் என்ன என்றான்..
சிரியா என்றேன் நான்...
.
மற்றொரு சிறுமி ஸேவ் சிரியா என
நெற்றியில் எழுதி வைத்துள்ளாள்
அவளின் முகங்களும் சிரியா முகங்களும்
ஒரே காங்கிரீட் காயங்களால்
கட்டுப்போடப்பட்டிருந்தன...
.
ஒரு தகப்பன் அழுகிறான்
ஒரு தாய் உச்சி முகர்கிறாள்
ஒரு இளைஞன் கைகளில் மூன்று
பிஞ்சுப்பிணங்களை
சே...
பிய்த்தெறியப்பட்ட ரோஜாக்களை
பொறுக்கி எடுத்துக்கொண்டு
கண்ணீரால் கழுவிக்கொண்டிருந்தான்...
.
ஒரு நூறு கதறல்கள்
வெள்ளைநிறத்துணியில் பொதிந்து
வரிசையாய் அடுக்கப்பட்டிருந்தன
ரோஜாக்கள்..
கறுப்பு அங்கிகளுக்குள்
புதைந்துகொண்டிருந்தன
கதறல்களின் சப்தங்கள்...
ரோஜாக்கள் முத்தமிடப்படாதவை...
.
விண்ணும் மண்ணும் அதிர
குண்டுகள் துளைத்து இறங்குகிறது
கைகளை நீட்டுகிறது குழந்தை
கால்களை இழந்து காத தூரத்தில்
நாதியற்று வீழ்ந்த தந்தையை
நரங்கிக்கொண்டே வந்து முத்தமிட்டு
மூர்ச்சையாகிறாள் அவள்...
.
யுத்தத்தை முத்தமிட்டு
மிச்சமிருந்தால் அச்சிறுவர்கள்
அச்சிறுமிகள் நாளைய சிரியாவை
மீட்டெடுப்பர்
ஷாம் புன்னகைக்கும்.