FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on February 28, 2018, 02:07:31 AM

Title: நான் காமக்கொடூரன் ..!
Post by: சாக்ரடீஸ் on February 28, 2018, 02:07:31 AM
இத்தனை நாள்
நான்
உன்மீது வைத்திருந்த
நேசத்தில்
காமம் இல்ல என்று
நினைத்து இருந்தேன் ..
இன்று இரவு
உன் நினைவுகளுடன்
இருக்கையில்
 எனக்கும்  காமம் வந்துவிட்டது
உன்மேல் ....

தனிமை
என்னும்  கொடுமையான  உடையை
அணிந்திருக்கும் உன்னை
பார்த்து என்  மனம் 
உன்மீது காமம் கொள்கிறது ....

நீ உடுத்தி  இருக்கும்
தனிமை என்னும்  உடையை
அகற்றுவதால்
உன் துன்பங்கள்
உன் ரணங்கள்
உன்னை நீங்கும்
என்ற நம்பிக்கையில்
நான்      காமத்தோடு
காத்திருக்கிறேன் ....

இந்த விஷயத்தில்
நான் காமக்கொடூரனாய்      இருப்பதில்
பெருமை கொள்கிறேன் ....         
Title: Re: நான் காமக்கொடூரன் ..!
Post by: joker on March 02, 2018, 11:16:31 AM
Pennin thanimai kandu adhai pokka kaamam thaan thunaiyo ?




Title: Re: நான் காமக்கொடூரன் ..!
Post by: சாக்ரடீஸ் on March 02, 2018, 05:00:43 PM
ஒருவன் கொலை செய்ய
ஆயுதம் எடுத்தால் அவனை
கொலைகாரன் என்கிறோம்
அதுவே
உயிரை காப்பாற்ற ஒருவர்
ஆயுதம் எடுத்தால் அவரை
மருத்துவர் என்கிறோம்
அதுபோல் தான்
ஒரு பெண்ணை அடைய
காமம் கொண்டால்  அது தவறு
அதுவே
ஒரு பெண்ணின்  மன வலியை
போக்க காமத்தை
கையில் எடுத்து
என் விழியன் வழியில் பார்த்தால்
தவறு இல்லை ........
   

சில நோய்க்கு அறுவை சிகிச்சை செய்வது தன வைத்தியம் ....சிகிச்சையின் கொடூரத்தை கண்டால்  .....நோய் முற்றிப்போய் வாழ்க்கை நரகம் ஆகிவிடும்
....இதுவும் ஒரு விதி வைத்தியம் தான்......என் பார்வையில் தனிமை என்னும் விஷத்தை .....காமம் என்னும் விஷத்தை கொடுத்தால் மட்டுமே...அந்த விஷத்தின் வீரியம் குறையும்......முள்ளை முள்ளால் எடுப்பது போல் 
Title: Re: நான் காமக்கொடூரன் ..!
Post by: joker on March 02, 2018, 05:24:53 PM
நீண்ட நெடிய  விளக்கம் தேவை இல்லை நண்பா
உங்கள் பார்வை உங்கள் சுதந்திரம்

தனிமை விஷம் என்கிறீர்

என்று நம் காலில் இருக்கும் முள்ளை எடுக்க
இன்னொரு முள்ளை தேடியிருக்கிறோம் நண்பா ?
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் உள்ளது உவமை

தனிமை வலிமை பெற உதவட்டும்

நன்றி


Title: Re: நான் காமக்கொடூரன் ..!
Post by: சாக்ரடீஸ் on March 02, 2018, 06:04:19 PM
நிஜத்தில் நாம் முள்ளை தேடுவதில்லை உண்மை தான் ....முள் உவமை நிஜத்தில் உதவ விட்டாலும்.....என் கிறுக்கல்களில் நிறைந்திருக்கும்  அவள் தனிமையின் ரணங்களை நீக்கவது உதவட்டும் நண்பா ....

இனி வரும் என் எல்லா கிறுக்கல்களுக்கும் ....உங்கள் விமர்சனத்தை நான்  எதிர் பார்ப்பேன் ....தவறை சுட்டி காட்டினால்....திருத்தி கொள்வேன் ....நன்றி நண்பா :)