FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Yousuf on March 10, 2012, 03:49:28 PM

Title: உடற்பருமன் ஏற்பட்டு விட்டதா?
Post by: Yousuf on March 10, 2012, 03:49:28 PM
* ஆமணக்குச் செடி வேரைக் கொண்டு வந்து, நன்றாகப் பொடித்து, அத்துடன் தேனைக் கூட்டிப் பிசைந்து, ஒரு டம்ளர்; தண்ணீரில் அப்படியே ஊற வைத்து விடுங்கள். இரவு முழுவதும் ஊறினதும், காலையில் அதைக் கலக்கி வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள். நாலு வாரத்திற்குள் உங்களுக்கு நல்ல பலன் தெரியும்.

* பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவரம் பருப்புடன் மிளகு சேர்த்து சமைத்து உண்டு வந்தால், 3 மாதங்களில், பெருத்த உடல் பருமன் குறைந்து, நல்ல கெட்டியடைந்து ஆரோக்கியமடையும். வீரிய விருத்தியும் உண்டாகும்.

* பருத்த உடல் கறைந்து கெட்டிப்பட நில ஆவாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி, துணியில் சலித்து, ஒரு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு, தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் போதும். தன்னில் தானே, உடல் வற்றிக் கெட்டிப்படும்.

* பச்சை வாழைத் தண்டை நறுக்கி, அதில் எலுமிச்சைச் சாற்றினைக் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் குறையும்.

* காலையில் எலுமிச்சைப் பழச் சாற்றை உப்பு சேர்த்துக் கலந்து, ஒரு மாதம் வரை வெறும் வயிற்றில் அருந்தினால், தேவையற்ற கொழுப்புச் சத்தும், ஊளைச் சதையும் குறையும். ரத்தமும் சுத்தப்படும்.

* அகில் கட்டையை பசும்பால் விட்டு சந்தனம் அரைப்பது போல அரைத்து, அதை உடம்பில் பூசிக் கொள்ள, உடல் தளர்ந்து சதையெல்லாம் தொள தொள என்று ஆடும் தொண்டு கிழவர்களின் தசை நார்கள் கெட்டிப்படும்.

* கொழுப்பு உணவையும், அரசி உணவையும் குறைத்துக் கொண்டு தினம் எலுமிச்சம் பழச்சாறு 1 அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ், தண்ணீர; 4 அவுன்ஸ் மூன்றையும் கலந்து, சிறிது சூடு செய்து, காலையில் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு வர, எடை குறையும்.

* 50 கிராம் கொள்ளு எடுத்து, 400 மில்லி தண்ணீரில் இரவே ஊற வைத்து விடவும். காலையில் அதைக் கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் கால் தேக்கரண்டி இந்துப்பு சேர்த்துக் குடிக்கவும். அதே போல் காலையில் ஊற வைத்து, மாலையில் கொதிக்க வைத்து வடிகட்டி, இந்துப்பு சேர்த்துச் சாப்பிடவும். ஒரு மாதத்தில் பெருத்த உடல் இளைக்கும்.

* வாழைத்தண்டை சிறு துண்டுகளாக வெட்டி, மிளகு, சீரகம், பூண்டு, சிறிது எலுமிச்சை பழச் சாறும் (ஒரு அவுன்ஸ்) சூப்பிற்கு ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு கலந்தால், போதுமானது) கலந்து, மூடிக் கொதிக்க வைத்து, உப்பிட்டு முறைப்படி தாளித்துக் கொள்ளவும். இதனை காலை-பகல் உணவுக்கு முன் அருந்தவும். உடல் கனம் குறையும். இரத்த அழுத்தம் கூடுதலானவரகளுக்கு மிகவும் சிறந்த உணவு இது.

* வாழைத் தண்டை இடித்துத் தேவையளவு சாற்றை எடுத்து, மண் சட்டியில் ஊற்றிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, இவைகளைத் தட்டிப் பச்சைக் கொத்தமல்லியும் போட்டு மூடிக் கொதிக்க விட்டு, இறக்கிச் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றைக் கலந்து உப்பிட்டு அருந்தி வரலாம். 3 மாதங்களில் உடல் கனம் குறையும்.

* கல்யாண முருங்கை என்ற முள் முருங்கை இலைச் சாற்றைத் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் காலை, மாலை 2 வேளையும் 40 மில்லி அளவு அருந்தி வர, மிகப் பருத்த உடல் குறையும்.