FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on February 26, 2018, 04:11:12 PM

Title: போராட்டம்
Post by: Guest on February 26, 2018, 04:11:12 PM
                                         போராட்டம் 



கண் விழித்து மூடுகையில்
ஆயிரம் போராட்டங்கள்
இற்று போன கூரைக்குள்
பிய்த்து கொண்டு
என் கனவுகளை கடுக வைக்கும்
கதிரவனில் இருந்தே ஆரம்பம்
எனது போராட்டம்  ....

எழுந்தாலும் குனியேன்.. மரியாதை அல்ல
என் வீட்டு கூரை இடித்து கொள்ளும்
என் தந்தையின் வியர்வையும் கண்ணீரும்
எதிர்பார்ப்பும் ,இலட்சியமும்
நான் வாங்கிய பட்டத்துடன்
துரு பிடித்த பெட்டிக்குள்
என் இதயம் போல் அதுவும்
இற்று போய்க் கொண்டிருக்கிறது ...

என் வீட்டு கூரையும்
மதிலும்,இடுப்பு  வேட்டியும் கூட
வேலைக்காய் காத்திருந்து
நாழிகைகளை தொலைக்கிறது
பற்றி எரியும் வயிற்றை அணைக்க
பழஞ்சோற்று தண்ணீர் கூட இல்லை ......

நடக்க துடிக்கிறது மனம்
நகர மறுக்கிறது கால்கள்

உடலுக்குள் பசியின் இருட்டு
கண்களில் பரவி இதயத்தில்
ஊருடுவும் வேளை

ஒரு குவளை நீரில்
புது ஜென்மம் !

மீண்டும் வேலைக்காய் போராட்டம்  !
பசியுடன் போராட்டம்  !
பணத்துடன் போராட்டம்  !
பயத்துடன் போராட்டம்  !

சரியான வேலை வாய்ப்புமில்லை
அரவணைக்க மனித நேயமும் இல்லை ......

என்னில் ஆயிரம் போராட்டம்  ...
Title: Re: போராட்டம்
Post by: joker on February 26, 2018, 05:22:35 PM

போராட்டமே வாழ்க்கை
போராடினால் தான் வாழ்க்கை
விடியும் வரை போராடு
வெற்றி மடியில் கிடக்கும் வரை போராடு


வாழ்த்துக்கள் சகோ
வலிகள் நிறைந்த வரிகள் உங்கள் கவிதையில்