FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on February 22, 2018, 09:18:27 PM

Title: காதலையும் காமத்தையும் இணைக்கும் புள்ளி
Post by: thamilan on February 22, 2018, 09:18:27 PM
இதுவரை நான் சந்தித்த பெண்களில்
என் உயிரை தொட்ட
அழகு - நீ

உன்னைப் பார்த்த நொடியில்
எனக்குள் ஏற்ப்படும் கிளர்ச்சியை
எந்தப் புணர்தலும் கொடுக்காது
என்றே நம்புகிறேன்

மனம் முழுவதும்
காமத்தில் வழியும் நொடியிலும் கூட
உன்னைப் பார்த்துவிட்டால்
காமம் முழுவதும் வழிந்து
காதல் ஊரத் தொடங்குகிறது

காமத்தால் மனம்
கிறங்கி கிடக்கும் போதெல்லாம்
உன்மீதான காதலுணர்வே
என்னை மீட்டு வருகிறது
உன்  காதலுக்கு மட்டுமே
என் காமத்தை விழுங்கும்
சக்தி இருக்கிறது

ஒரு மெல்லிய நூலிழையின்
இடைவெளியில்
காதல், காம சமுத்திரங்கள்
பிரிந்து கிடக்கிறது

எனது காதலில்
காமம் கலந்துவிடாத போதும்
எனது காமத்தில்
காதல் நிச்சயம் கலந்திருக்கும்
காதலையும் காமத்திலும்
இணைக்கும் புள்ளி நீ

காதல் வற்றாத சமுத்திரம்
காமம் தீராத தாகம்
வற்றாத சமுத்திரமும்
தீராத காதலும்
நமக்கு கடவுள் தந்த வரங்கள்