FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on March 09, 2012, 05:56:43 PM

Title: வாழ்க்கை!
Post by: Yousuf on March 09, 2012, 05:56:43 PM
படித்ததில் பிடித்தது!

வாழ்க்கை -
இது -
தத்துவமல்ல..
தனித்துவம்..!
இது -
பேசப்படுவதல்ல
பேணப்படுவது.

ஏழை என்பதும்
பணக்காரன் என்பதும்
இருக்கின்ற
பணத்தினால் அல்ல
சுரக்கின்ற குணத்தினால்.

செல்வத்தினால்
வாழ்க்கையை
அளக்கிறவனை விட
நிம்மதியால் அளக்கிறவனே
நிலைப்படுகிறான்.

உன் வாழ்க்கை என்பது
உன்னை மட்டும்
சார்ந்தது அல்ல
உடன் இருப்பவர்களையும்
சூழ்ந்தது…

உதவு.. உதவு..!
வாழ்க்கையின்
கதவு திறக்கும்..!

உயர உயர
பறக்கும் பறவைக்கும்
உணவு என்னவோ
கீழேதான்..!

எண்ணமும் செயலும்
வாழ்க்கையின்
இரு சிறகுகள்..!
உயரப்பற
எனினும்
உள்ளம் என்ற அலகுதான்
உனக்கு
உணவைத் தரும்…
மறந்து விடாதே..!

பட்டப்படிப்புக்கு
புத்தகங்களே போதும்
வாழ்க்கைப் படிப்புக்கு
அனுபவங்களே ஆசான்..!

உன் -
வாழ்க்கைப் பயணம்
துவங்கட்டும்..!
அது -
வெறும் வெளிச்சத்தை
நோக்கி அல்ல
விடியலை நோக்கி
இருக்கட்டும்..!

-ஜபருல்லாஹ்
Title: Re: வாழ்க்கை!
Post by: gab on March 09, 2012, 06:07:26 PM
யதார்த்தமான நல்ல கவிதை .

செல்வத்தினால்
வாழ்க்கையை
அளக்கிறவனை விட
நிம்மதியால் அளக்கிறவனே
நிலைப்படுகிறான்.

உண்மையான வார்த்தைகள் .நன்றி யூசுப்.
Title: Re: வாழ்க்கை!
Post by: Yousuf on March 09, 2012, 06:27:05 PM
கவிதையை எழுதியவருக்கே பாராட்டுக்கள்!

நன்றி GAB உங்கள் பின்னூட்டத்திற்கு!
Title: Re: வாழ்க்கை!
Post by: Global Angel on March 10, 2012, 12:43:37 AM
Quote
பட்டப்படிப்புக்கு
புத்தகங்களே போதும்
வாழ்க்கைப் படிப்புக்கு
அனுபவங்களே ஆசான்..!



நல்ல கவிதை யோசுப் .... அனுபவ பாடம் போன்று எதுவும் நமக்கு எதையும் கற்று தருவதில்லை
Title: Re: வாழ்க்கை!
Post by: Yousuf on March 10, 2012, 11:54:16 AM
நன்றி ஏஞ்செல்!