FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on January 20, 2018, 10:35:51 AM
-
பெண்ணே
நீ ஒரு பிரபஞ்சம்
பூமி உனது உடல்
உனது நிலத்திலிருந்து தான்
பிறந்துகொண்டிருக்கிறோம்
வானம் உனது இதயம்
உனது இதயத்தின் கீழ் தான்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
காற்று உன் சுவாசம்
நீ இல்லையென்றால்
நாங்களும் இல்லை
நெருப்பு உனது காதல்
குளிர்காய
சமைக்க
விளக்கேற்ற
உன்னில் இருந்து தான் எடுத்துக்கொள்கிறோம்
நெருப்பை
நீர் உனது தாய்மை
குடிக்க
குளிக்க
பாசனம் செய்ய
உன்னில் இருந்து தான் இறைத்துக்கொள்கிறோம்
நீரை
உன் பால்வீதியில்
உன்னை மையம்கொண்டு
சுழலும் கிரகங்கள் நாங்கள்
நீ எங்களுக்காக
வாழ்க்கைப்படுபவள் அல்ல
வாழ்க்கை
புரிந்தும் புரியாத மாதிரி
உன்னை புரியாமல்
புரிந்தமாதிரி வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
ஆதியில்
நீ கொடுத்த வில்லைக் கொண்டே
பாதியில்
உன்னை குறிவைத்து
சுற்றிக்கொண்டிருக்கிறோம் உன்னோடு
-
Thamilaaannnn!!! 8)
புரிந்தும் புரியாத மாதிரி
உன்னை புரியாமல்
புரிந்தமாதிரி வாழ்ந்துகொண்டிருக்கிறோம் >> very true! :)