FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on January 15, 2018, 07:38:50 AM
-
காலத்தை நீ துரத்துகிறாய்
காலம் உன்னை துரத்துகிறது
இது முடிவில்லாத ஓட்டம் என
மனசு அடிக்கடி சொல்கிறது
மூளை கேட்பதாயில்லை
ஜெயிப்பவன் தோற்பதும்
தோற்பவன் ஜெயிப்பதும்
புரிந்த நியாயங்கள் ..புரியவில்லை
தோல்வியே வாழ்க்கையானால்
வாழ்க்கையின் அர்த்தம் என்ன???
வாழ்ந்தாலும் ஏசும் உலகம்
தாழ்ந்தாலும் ஏசும்
ஏமாற்ற தெரிந்தவன் புத்திசாலி
ஏமாந்தவன் சோமாலி
காலத்தின் கண்களில் இருவரும் கோமாளி
-
இதுல நீங்க ஏமாளியா சோமாலியா? தெரிஞ்ச நல்லா இருக்கும்