FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on January 08, 2018, 08:04:56 PM

Title: உயிர் கொல்லும் தகாத காதல்
Post by: thamilan on January 08, 2018, 08:04:56 PM
எயிட்ஸ்
இது விற்பவரும் வாங்குபவரும்
நஷ்டப்படுகிற  ஒரு
விசித்திர வியாபாரம்

காலனுக்கான காமனின்
அன்பான அழைப்பிதழ்
சிலரால் அஞ்சல் செய்யப்படும்
அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்படும்

ஒன்றும் ஒன்றும் இரண்டு
இது கல்விக்கான கணக்கு
ஒன்றும் ஒன்றும் மூன்று
இது  கலவிக் கூட கணக்கு
ஒன்றும் ஒன்றும் பூஜ்யம்
இது  கடவுள் போடும் கணக்கு

பலபேரை தழுவிய வேசி
கொதிநீரைத் தழுவாத ஊசி
சோதிக்கப்படாமல் எடுக்கப்படும் ரத்தம்
காயப்பட்ட இதழ் சிந்தும் முத்தம்
இவையே எய்ட்ஸ்சின்  இலக்கு
நமக்கேன்  இது விலக்கு

இளைஞனே  நீ
நீ இராமனாயிருந்தால்
காத்திருப்பது சீதை
காமனாய் நீயிருந்தால்
காத்திருப்பது சிதை

பத்தினி வரும் வரை
பட்டினியோடு இருந்திட்டு
அடங்காப்பசியா.....?
ஆணுறையாகிலும்  அணிந்திடு

கண்ட கண்ட மெய்யெழுத்துக்களோடு
கலந்ததில் உருவாகிக் கொண்டிருக்கும்
சில உயிரெழுத்துக்கள்  குற்றெழுத்தாய்
குருகிக் கொண்டிருக்கின்றன
அவைகளை நோக்கி
ஆயுத எழுத்துக்களை அல்ல
ஆறுதல் எழுத்துக்களை நீட்டுவோம்