FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on January 04, 2018, 09:03:10 PM

Title: முடி மடி இடி
Post by: thamilan on January 04, 2018, 09:03:10 PM
மன்னித்தால்
நீயென் மடி
மறுப்பதானால் சேர்ந்தே மடி

அனுதினமும்
அடிமேல் அடி
அமைதியென்றால்
ஆறே அடி

உள்ளத்தின்
உயர்வின் படி
உண்மையான
உயர்வை படி

சண்டையிட்டால்
சிதையும் குடி
சகிப்பினையே
மருந்தாய் குடி

வெறுப்புகளை
விரைந்தே முடி
வாழ்நாளோ
உதிரும் முடி

உரல்பொருக்கும்
உலக்கை இடி
உயிர்நறுக்கும்
தனிமை இடி

நரகத்தை
தள்ளிப் பிடி
நம்பிக்கையே
வாழ்வின் பிடி