FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: MaSha on December 21, 2017, 09:19:51 PM

Title: மனவெளிச்சம்
Post by: MaSha on December 21, 2017, 09:19:51 PM
ஓ மானிடரே
வெளிச்சத்தை வெளியில் தேடுவதேன்
அகல் விளக்கொன்று 
அழகாய் எரிந்திட
அவர் அவர் மனதினிலே...


மானிட வாழ்க்கை போல
இல்லையா பலாப்பழம்
முள்போல துயரங்கள்
பிசின் போல பற்றுகள்
சடை போல தடைகள்
கொட்டை போல ஆணவம்
எல்லாம் களைந்தால்
சுளை போல குணம்

உதயமென்பது விண்ணில்லை
உன்  நெஞ்சினிலே!
உலகமென்பது மண்ணிலில்லை
உன் தோளிலே !
சிகரமென்பது மலையிலில்லை
உன் பணிவினிலே !!!
Title: Re: மனவெளிச்சம்
Post by: JeGaTisH on December 22, 2017, 01:41:34 AM
(https://i.giphy.com/media/i5QFHvNau0ObK/giphy.webp)

nice akkka

கவிதைகள் தொடரட்டும்
Title: Re: மனவெளிச்சம்
Post by: SweeTie on December 22, 2017, 08:28:55 AM
இன்னும்  சில வரிகள்  எழுதி இருக்கலாம்.   முயற்சி பண்ணுங்கள்.  பலன் கிடைக்கும்.
வாழ்த்துக்கள்
Title: Re: மனவெளிச்சம்
Post by: MaSha on December 22, 2017, 10:02:13 PM
இன்னும்  சில வரிகள்....  ;)
Title: Re: மனவெளிச்சம்
Post by: SweeTie on December 23, 2017, 04:03:23 AM
மாஷா  நன்றிகள். இப்போ உங்ககவிதை சிறப்பை இருக்கு. 
வாழ்த்துக்கள்