FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: MaSha on December 19, 2017, 12:53:50 PM
-
வானம் மிக நீண்ட தெருக்களாய்
அகன்று விரிந்து கிடக்க
அங்கே உன்னொரு சிறுபார்வைக்காய்
காத்துக் கிடக்கிறது என் மனசு
எல்லோரும்
பார் அவள் கிறுக்கி என்கிறார்கள்
தொலைத்த இடத்தில்
மரணத்தின் பின்னிருந்து
உன்னை தேடுகிறேன் என்பதை
யாரறிவார்
கண்ணீரில் நனைந்த
கல்லறையில் - உன்னைப்
பிரிந்த சோகமே பூக்களாக பூத்திருக்க
எனக்குள் இறவாத உன்
நினைவுகளால் நானே மெல்ல மெல்ல
உயிர் துறக்கிறேன்
சுற்றித் திரிந்த தெருக்களும்
அமர்ந்து பேசிய கோவில்களும்
கள்ளத்தனமாக நாம் சந்தித்த கிணத்தடியும்
முத்தம் தந்த ஜன்னலின் அருகாமையும்
வேறென்ன வேண்டும் எனைக் கொல்ல
யாருக்கும் புரியாது தான் - ஏன்
உனக்கே புரியாது அது
-
(https://i.makeagif.com/media/6-10-2015/RfNvhq.gif)
அக்கா கவிதை அருமை....
கவிதைகள் தொடரட்டும்....
-
MASHA இது நீங்களா ? சோகத்தை எல்லாம் வடிகட்டி கவிதையாய் எழுதி இருக்கிறீங்க.
தொலைஞ்சத தேடுறத விட்டுட்டு புதுசா ஒண்ணா தேடுங்க.
கவிதை அருமை
-
மாஷா தொலைத்ததை தேடுங்க கிடைக்கும். தமிழனின் சொன்னமாதிரி
புதுசு வேண்டாம். வாழ்த்துக்கள்
-
விலகும் போது பெருகும்
அன்பைக் கைவிடுதலே
தொடர்ந்து வாழ்தலுக்கான
தொலைநோக்கு வழி......
-
இந்த கவிதை ஒரு காதலியின் கவிதை அல்ல இது கடவுளின் கவிதை இது காதலை கடந்த ஞானம் இங்கே ஒரு இதயம் பேசுகிறது நீங்காத நினைவுகள் பற்றி அன்புள்ள சகோதரி நீ வாழ்ந்த வாழ்க்கைக்கு நீ தந்த அர்த்தம் மிகவும் சிறப்பு
-
வாவ்வ் மாஷா அருமையான கவிதை. தொலைத்தலும், தொலைவதும் இயல்பு. அதே போல் மீண்டு வருவதும் இயல்பு. நினைவுகளில் மட்டும் நின்றிருக்கட்டும் தொலைத்தவைகள்
-
கண்ணீரில் நனைந்த
கல்லறையில் - உன்னைப்
பிரிந்த சோகமே பூக்களாக பூத்திருக்க
எனக்குள் இறவாத உன்
நினைவுகளால் நானே மெல்ல மெல்ல
உயிர் துறக்கிறேன்
வழியை உணர்த்தும் வரிகள்......
-
mashu hatts of to u