FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on December 18, 2017, 02:14:16 PM
-
ஒருவருக்கும் தெரியாமல்
ரகசியமாய் என்னை
உன்னிடம் கொண்டுவந்து சேர்த்துவிடும்
இந்தக் கடிதம்
எந்த ஊரில் இருந்தால் என்ன
என் கடிதத்தை நீ தொட்டதும்
உன் ஊரின் பனி போலே
சிலிர்க்கும் எனக்கு
எழுத்துக்களை பார்க்கிறாய் நீ
அந்த எழுத்துக்கள் மூலம்
உன்னைப் எட்டிப் பார்க்கிறேன் நான்
காற்று உன் வீட்டுக் கதவுகளை
அசைக்கும் போதெல்லாம்
நினைவுப்படுத்திக் கொள்
உன் இதயத்தை
நான் அசைக்க எடுத்த முயற்சிகளை
ஒவ்வொரு தடவையும்
நீ பார்த்த பார்வைகளை
தொகுத்து வைத்திருக்கிறேன்
ஆல்பமாக
அர்த்தம் சொல்லத்தான்
அகராதியை தேடிக் கொண்டிருக்கிறேன் நான்
விமானத்தில் நீ சென்ற உன்னை
வழியனுப்ப வந்த போது
கேட்டேன் நினைவிருக்கிறதா ?
என்னை என்னிடமே விட்டுச்செல் என்று
அவசியம் அனுப்பிவை
உன் திருமண அழைப்பிதழை
பரிசு விழுந்தது
யாருக்கென்று தெரிந்து கொள்கிறேன்
-
Thamilaaaaaaannnnn
yaaro aval, yaaro aval...? :D