(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fshuhaibmh.files.wordpress.com%2F2010%2F09%2Fdisplay_image-aspx.jpg%3Fw%3D155%26amp%3Bh%3D195&hash=0b2069b4bee23fb3ce3be6f0d69480e1ae9bdd84)
இந்திய விசாரணை சட்டத்தில் ஒருவர் விசாரணை என்ற பேரில் கைதாகினால் அவரை 15 நாள் சிறையில் வைக்கின்றனர் பின்பு போலிஸ் கஸ்டடிக்கு மனு செய்து விசாரணை கைதியை போலிஸ், உரி, உரி என்று உரித்து சில உண்மைகளை நிருபித்து பல பொய்களை சொடித்து விசாரணை என்ற பெயரில் மனித உரிமை மீறல் அதிகமாவே ஏற்பட்டு உள்ளே தள்ளுகின்றனர். 15 நாள் விசாரணை காலம் முடிந்து ஜாமீனில் வெளிவருகிறார். பின் ஒரு வழக்கறிஞரை வைத்து வழக்கை நடத்துகின்றார். இதில் அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் நிருபிக்கபட்டால் விசாரணை என்ற பெயரில் 15 நாள் ரிமான்ட் வைத்து பின்பு போலீஸ் கஸ்டடியில் வைத்து ஒருவரை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தல் அடைந்தவரானால் அவருக்கு இழப்பீடு யார் தருவது????? குற்றம் அற்ற ஒருவருக்கு எப்படி 15 நாள் சிறை தண்டனை கொடுத்தார்கள். இத்தண்டனையால் அவங்க குடும்ப உறவுகள் எப்படியெல்லாம் பாதிக்கப் பட்டிருப்பார்கள். இது என்ன நியாயம்??? இது எதுவகையான சட்ட வடிவம்?? அப்போ விசாரணை என்ற பெயரில் யாரைவேண்டுமானாலும் பிடிச்சு 15 நாள் ரிமான்ட் பண்ணலாமா?? உள்ள தள்ளலாமா?? இதற்கு இழப்பீடோ, நீதிமன்றம் மன்னிப்போ கிடையாதா?? நீதிபதிகளெல்லாம் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா?? அவர்களை விமர்சனம் செய்யகூடாதா??
தமிழ்நாட்டில் நெல்லையில் கல்லூரி வைத்து நடத்திய ராஜா போன்ற வாழ்கை வாழுகின்ற ஒரு கல்வி வியாபாரி ஒரு கொலை வழக்கில் சிக்குகிறார். அவரை கைது செய்து கீழ் கோர்ட்டில் ஆஜர்செய்து போலிசாரால் குற்றபத்திரிகை தாக்கல் செய்து வழக்கு சில காலம் நடந்து அவர் குற்றம் அற்றவர் என்று தீர்ப்பு வருகிறது. பின்பு எதிர் சம்பந்தப்பட்டவர் ஐகோர்ட்டில் அப்பில் செய்து தண்டனை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை அடைகிறார். அதன் பின் இந்த கல்வி வியாபாரி உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கிலிருந்து எளிதாக விடுதலையாகிறார். கீழ் கோர்ட்டில் தப்பித்து, மேல்கோர்ட்டில் தண்டனையாகி, உச்ச நீதிமன்றத்தால் விடுதலையாகிறான். இது எதுவகையான சட்டம் என்று புரியவில்லை … ஆட்சி அதிகாரம் உள்ளவருக்கும், பணம் பலம் பொருந்தியவருக்குமே நீதி தலை சாய்த்திருக்கிறது. சந்தேகமே கொள்ளவேண்டாம் நீதி அப்படிதான் இருக்கிறது. சாமான்ய மக்களுக்கு நீதி என்றும் துரோகம் இழைக்கப்பட்டதாகதான் இருக்கிறது. இந்தியாவில் எனக்கு தெரிந்து எந்த அரசியல்வாதியும் ஒரு ஆயுள் தண்டனை கைதியாகவும், தூக்கு தண்டனை கைதியாகவும் இருந்ததில்லை. இது அதிக பணம் படைத்தவனுக்கும் பொருந்தும். பணம் படைத்தவன் தேவை அரசியல்வாதிக்கு தேவையாய் இருக்கிறது. அதனால இரண்டு பேருமே கூட்டு களவாணிகளாகத்தான் இருக்கானுங்க….இவனுங்களுக்கு நீதிபொம்மை ஒரு தலையாட்டி பொம்மைதான்.
நீதி மன்றம் வெறும் சாட்சிகள் அடிப்படையிலும், அரசு தரும் தகவல் அடிபடையிலே இயங்குகிறது. ஆளும் அரசு அராஜக அரசாக இருந்தால் நீதி எப்படி நேர்மையாக இருக்கும்? “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது” என்று சொல்வார்கள் இது சரியான வாக்கியமா…? ஆயிரம் குற்றவாளி தப்பிக்கபடலாம் என்றால் அக்குற்றவாளிகள் என்ன நாட்டுக்காக பாடுபட்டவர்களா…?? திருட்டு, கொள்ளை, கொலை, கற்பழிப்பு எல்லாம் அரங்கேற்றிதான் குற்றவாளியாகிறான் அவன் தப்பித்தால் நீதி இழைக்க பட்டவருக்கு அது அநீதியாகதானே இருக்கும். ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதற்காக பல கேடி கிரிமினல்களை தப்பவிடலாமா என்றால் இது என்ன ஒரு முட்டாள்தனமான வாக்கியமாக இருக்கிறது பாருங்கள்…ஆனால் இங்கே இவ்வாக்கியத்திற்கு பொய்யாக சில குற்றவாளிகளும் பல நிரபராதிகள் தான் தண்டிக்கபடுகிறார்கள். இதில் “வாய்மையே வெல்லும்” என்று வசப்பாட்டு வேற…எங்க ஊர் பக்கம் நீதிமன்ற லட்சணத்தை பற்றி சொல்வார்கள். “ஆடு காணோம் என்று கோர்டுக்கு போனா மாடு வித்துதான் கேசு முடிக்குனும்” இந்த நிலையில்தான் இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் உள்ளது. நீதிமன்றங்கள் முழுக்க முழுக்க ஆளும் அரசுக்கும், பணம் படைத்த முதலைகளுக்கும் ஆதரவாகவே மறைமுகமாக செயல்படுகிறது….இதில் எள்ளளவும் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இதுதான் உண்மை. தினமும் நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வையும், நீதிமன்ற நிகழ்வையும் பார்த்தாலே நமக்கு புரிந்துவிடும்.