FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Yousuf on March 06, 2012, 05:00:27 PM
-
தூங்கும் போது உடலும் மனமும் செயலற்று இருக்கும் எனபது தான் பலரின் கருத்து ஆனால் தூங்கும் போது தான் மூளை சுறுசுறுப்பாக இயங்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும் தூங்கும் போது மின் தூண்டுதல் மூளையில் ஏற்படுகின்றதாம்.
அதிக அளவில் மின் தூண்டுதல் ஏற்படுபவர்கள் நீண்ட நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள் எனவும் ஆராய்ச்சியில் நிருபிக்கப்பட்டுள்ளது. இந்த மின் தூண்டுதல்கள் ஸ்பின்ட்ல்ஸ் என கூறப்படுகிறது. இதன் செயல்கள் மூளையில் உள்ள தலாமஸ் என்ற பகுதியில் நடக்கிறதாம்.
தூங்கும் போது கேட்கும் சத்தங்களை வேறு பகுதிகளுக்கு திருப்பி விடும் வேலையை இந்த தலாமஸ் செய்கிறது. அதனால் தான் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது நமக்கு சத்தம் கேட்பதில்லை. தூங்கும் போது மூளையில் அடிப்பாகத்திலிருக்கும் வேறு நரம்பு மண்டலங்கள் இயங்கத் தொடங்குகின்றன.
தூங்கும் போது தான் நியூரான்கள் மிக சுறுசுறுப்பாக இயங்கி ஆரோக்கியத்திற்கு தேவையான கடினமான சில பணிகளை செய்கின்றன என்பதால் நன்றாக தூங்க வேண்டும் என்கிறார் தூக்கம் குறித்த மருத்துவ நிபுணரான னுச எல்லேன்போகேன்.
ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தினசரி 16 மணிநேர தூக்கம் மிக அவசியமாகும். தற்போது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பெரியவர்களுக்கு 7 மணி நேரத் தூக்கம் போதுமானது என கண்டறியப்பட்டுள்ளது. மொத்தத்தில் தூக்கம் வந்தால் தூங்குவதில் எந்த தவறும் இல்லை எனவும் கூறுகின்றனர் மன நல மருத்துவர்கள்.