FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on December 13, 2017, 03:41:58 AM

Title: காதலுக்கு மரியாதை
Post by: SweeTie on December 13, 2017, 03:41:58 AM
ஆதாரம் இல்லாமல் அணைப்பவனும்  நீயே
சேதாரம் இல்லாமல் சிரிப்பவளும் நானே 
காதோரம் பேசி களிப்பூட்டுபவன்   நீயே
மேலோட்டமாக  ரசிப்பவளும் நானே

விழியோரக் கண்ணீரில் கரைந்தவனும் நீயே
வாஞ்சையுடன் ஆட்கொண்ட  காதலியும் நானே
கொஞ்சலிலும்  கெஞ்சலிலும் மிஞ்சியவன் நீயே
வாஞ்சையுடன் வரவேற்ற ஓவியமும் நானே

விரலோடு விரலை விரயமாய் பின்னியவன்
மனதோடு மனதை  மாயமாய்  கட்டியவன்
திகட்டாத இனிப்பை இதழோரம் வழங்கியவன்
 ஒட்டுமொத்த குத்தகையாய்  அள்ளியவன் நீயே
பூர்வ ஜென்ம புண்யமாய் எண்ணியவள் நானே   
Title: Re: காதலுக்கு மரியாதை
Post by: JeGaTisH on December 13, 2017, 06:16:03 AM
கவிதை அருமை sweetie மா


(https://78.media.tumblr.com/bfb3581c70f4ebacbecd45899d6bfde2/tumblr_inline_nuuvm8KW6n1syo8f2_500.gif)
Title: Re: காதலுக்கு மரியாதை
Post by: MaSha on December 14, 2017, 10:49:38 PM
(https://s33.postimg.org/bhknfirof/lovely.png)
Title: Re: காதலுக்கு மரியாதை
Post by: SweeTie on December 15, 2017, 12:55:07 AM
நன்றிகள்  ஜெகா மாஷா ......