FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on March 05, 2012, 10:00:56 PM

Title: கல்லூரி!
Post by: Yousuf on March 05, 2012, 10:00:56 PM
படித்ததில் பிடித்தது!

சீருடை முத்திரைகள்

இங்கு தான்

முதன் முறையாக

நிராகரிக்கப்படுகின்றன

இவற்றின் நுழைவுத் தகுதி

பொருளாதார ரீதியிலும்

சாதி சமய அடிப்படையிலும்தான்

வழங்கப் படுகிறது.

மூக்குக்கண்ணாடியில்

முகம்பார்த்து

திருப்தியடைந்தவர்கள்

இங்குதான்

நிலைக் கண்ணாடியின் முன்

நிறுத்தப் படுகின்றனர்.

புதுப் புது

வர்ணனைச் சொற்களின்

அகராதிகள்!

தொடுக்கப்படுவதும்

இங்கேதான்.

அரைகுறை நாகரிகங்கள்

அரங்கேற்றப்படுவதும்

இந்த

ஆற்றங்கரைகளில்தான்.

‘படிக்கவரும் பெண்களுக்கு

அடுப்பெது’

என்று

பெண்களின் நிலையை

உயர்த்தியதும் இங்கேதான்.

அரசியல்வாதிகளும்

அறிவியலாளர்களும்

உருவாக்கப் படுவதும்

இதன் சுவர்களுக்கிடையேதான்.

பாதாள அறையில்

பத்திரப் படுத்தப்பட்ட

பல்கலைகளும்

இங்கே

பகிரங்கமாய் பரிமாறப்படுகின்றன.

இந்த வாடகை வீடுகளில்

குடியிருமைபெற்று!

சொந்தம் கொண்டாடுபவர்கள்

காலடி வைத்த

மூன்றே ஆண்டுகளில்

கட்டாயமாக

காலிப் படுத்தப் படுகின்றனர்.

பாடிக்களித்து

ஆட்டம் போட்டவர்கள்

பாசாகாமல்

அடுத்தடுத்த ஆறுமாதங்களுக்குள்

ஆஜராகும்

ஆயுள் கோர்ட்!

இந்த மேம்பாலங்கள்

இறுதியில்

வேலையில்லா திண்டாட்டம்

எனும்

வேதனைச்சாவடியில்

கொண்டு

தவிக்க விடுகின்றன.

இந்த காவல்துறைகள்

காலை முதல் மாலை வரை

மழை வெயில் பாராமல்

குறித்த நேரம் முடியும் வரை

கல்விக் கைதிகளை

கட்டிக்காக்கின்றன.

-shuhaib
Title: Re: கல்லூரி!
Post by: suthar on March 06, 2012, 08:08:48 AM
usf miga arumaiyaaga nanbar soli irukirar
Title: Re: கல்லூரி!
Post by: Yousuf on March 06, 2012, 10:32:28 AM
பாராட்டுக்கள் சகோதரர் ஷுஹைப்க்கு!

நன்றி சுதர் அண்ணா!