FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on December 09, 2017, 01:08:09 PM

Title: காயம் ஆற்றும் அருமருந்து காதல்
Post by: thamilan on December 09, 2017, 01:08:09 PM
சென்ற முறை
அதிக நேரம் எடுத்துக் கொண்டாய்
நீ

இந்த முறை
அதிக நேரம் எடுத்துக் கொள்ளுவேன்
நானென

ஒன்றுக்கொன்று
வாக்குவாதம் செய்கின்றன

உன்னை முத்தமிட்ட எனது
மேலுதடும் கீழுதடும் !!!!


நீ
என்ன சொன்னாலும்
தலையாட்டியபடியே கேட்டுக் கொண்டுருக்கின்றன

என்னை போலவே
உன்
ஜிமிக்கிகள் !!!!!


மகிழ்ச்சியில் திக்குமுக்காடி
சிரித்து சிரித்து நுரை தள்ளியபடி
தலைக்கனத்து
ஓடிக்கொண்டிருக்கிறது
எங்கள் ஊர் வழியாக
தினமும் நீ குளிக்கும்
ஆறு !!!!!


முகம் பார்க்கும் கண்ணாடி
முகத்தை மூடிக்கொண்டது
பிரபஞ்ச அழகி
உன் பிம்பத்தைக் கண்டதுமே !!!!!
Title: Re: காயம் ஆற்றும் அருமருந்து காதல்
Post by: AnoTH on December 09, 2017, 07:10:59 PM
காதல் கவிதைக்கு இலக்கணம் தாங்கள்
அருமை சகோ
Title: Re: காயம் ஆற்றும் அருமருந்து காதல்
Post by: JeGaTisH on December 09, 2017, 08:29:21 PM
கவிதை அருமை தமிழன் அண்ணா
கவிதைகள் தொடரட்டும்
Title: Re: காயம் ஆற்றும் அருமருந்து காதல்
Post by: SweeTie on December 10, 2017, 05:47:02 AM
எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு ..   அந்த தாதி பெண்கள் உங்களுக்கு மருந்து  ஊசி  ஏற்றுகிறேன்  என்று வேறு எதோ மருந்து கொடுத்துவிடடார்களோ  என்று  கொஞ்சம்  சந்தேகமா இருக்கு தமீழன்.   ஜெகாவை கடித்த  வைரஸ்  உங்களையும் கடித்திருக்கும்  போல தெரிகிறதே!!!      வாழ்த்துக்கள்