FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on July 21, 2011, 03:55:13 PM
-
என்னை வாழ்த்த வரும்
வார்த்தைகளில் கூட
தைக்கப்பட்ட ஈட்டிகள்!
உறவினர்களுக்கும் என்னுடன்
வார்த்தை பரிமாற்றத்திற்கு
மெளன பாஷைதான் வசதியாயிருக்கிறது!
பல்கலை பட்டம் மறந்தாலும்
"தண்டச்சோறு" பட்டம்
மட்டும் நீங்காது நினைவில்!
பட்டதாரி நான், இப்பொழுது
நடக்கும் கட்சிக்கூட்டங்களில்
காலவரையின்றி கலந்து கொள்கிறேன்!
கிடைக்கும் காசுக்காக அல்ல!
திறமையின் அடிப்படையில்
வேலையென்று அங்கு
மட்டும்தான் கேட்க முடிகிறது!!
-
nalla kavithai ;)