“சே” என்னும் புரட்சித் தீ பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியது இணையம் தான் பல சமயங்கள் நான் சேவின் புகைப்படத்தை இணையத்தில் பார்த்திருக்கின்றேன் அது மட்டும் அல்லாமல் ஆடைகளில் மற்றும் பல பொருட்களில் அவரின் புகைப்படம் யார் இவர் ????
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fgreatche.files.wordpress.com%2F2010%2F03%2Fche-1.jpg%3Fw%3D300%26amp%3Bh%3D200%26amp%3Bh%3D200&hash=579a3e2715c115077093acb1e0da7a9aa814fa99)
சே என்னும் புரட்சிக்காரனையும் ஒரு பிராண்ட் ஆக்கிவிட்டார்கள்!
இந்த வரலாற்று நாயகனை, வாழ்வை, அவரது போராட்ட வரலாற்றை, அவரது தாக்கத்தை தேட ஆரம்பித்தேன். அவரைப் பற்றிய புத்தகங்கள், மற்றும் ஒளிப்பதிவுகள் என தொடர்ந்த தேடலின் விளைவு இன்று “சே”வை நேசிக்கும் பல்லாயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fgreatche.files.wordpress.com%2F2010%2F03%2Fche1.jpg%3Fw%3D305%26amp%3Bh%3D368%26amp%3Bh%3D368&hash=fee0ecdaaa2ec084c89a5b8d5b7583f1b36328ba)
பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான மனிதன்.
சே தொடர்பான “சே வாழ்வும் புரட்சியும்” என்ற ஆவணப்படம் ஒன்றை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. “சேகுவேரா வாழ்வும் மரணமும்” என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது..வெறும் புகைப்படங்களில் மட்டுமே கண்ட சே குவேராவினை ஒளிப்பேழையில் பார்த்தேன். அனைவரையும் கவர்ந்திழுக்கும் வசீகரமான சிரிப்பு மிடுக்கான தோற்றம் இவை “சே”வின் அடையாளங்கள். உலகெங்கும் உள்ள விசிறிகள் அவரை உயர்ந்த இடத்தில் வைத்து கொண்டாடி வருகின்றார்கள். நெல்சன் மாண்டேலா “சே சாதித்ததை எந்த தணிக்கையும் அல்லது எந்த ஒரு சிறையும் நம்மிடமிருந்து மறைத்து விடமுடியாது. சுதந்திரத்தை விரும்பும் எந்த ஒரு மனிதனுக்கும் அவரது வாழ்க்கை ஒரு உத்வேகத்தைத் தரவல்லது. அவரின் நினைவுகளை நாம் எப்போதும் போற்றுவோம்” என்று கூறினார். பிரெஞ்சு அறிஞர் ழீன் பால் சாத்ரே குவேராவை “பூமியில் வந்துபோன முழுமையான மாமனிதர் சே” என்று கூறினார். கியூபாவின் முன்னாள் அதிபரான பிடல் காஸ்ட்ரோவோ “நமது காலத்திற்கும் மட்டும்மல்ல எதிர் காலத்திற்கும் உரிய சிறந்த மனிதர் சேகுவேரா மட்டுமே என் இதயத்தின் அடியாழத்தில் உள்ள மாசற்ற பிம்பம் சேகுவேரா….குறை காண இயலா,சமரசங்கள் ஏதும் அற்றப் போராளி சேகுவேரா மட்டுமே நம் குழந்தைக்களுக்கான எதிர் கால உதாரணம்….” என்று புகழ்ந்தார். சே எந்த இடத்திற்கு உரியவரோ அந்த இடத்தில் அவரை காண முடியும். சமூகத்தின் அடியாழத்தில் படிந்திருக்கும் மண்ணின் ஊடாக பரவுகின்ற சமூக எழுச்சிகளின் குறியீடாகவும் பண்பாட்டு அடையாள சின்னங்களாகவும் விளங்குபவர்களுக்கு உரிய இடங்கள் அவை மற்றையோரை விடவும் “சே”தான் இந்த யுகத்தின் மனித வடிவமாகத் திகழ்கின்றார். அதன் போக்குகள் அனைத்தையும் அந்த வடிவம் முழுமையாக பிரதிபலிக்க வில்லை என்றாலும் கூட “சே” ஒரு அடையாளமாக மாறுவதை தியாகம் என்னும் பரிணாமத்தை தவிர்த்துவிட்டு புரிந்துகொள்ள முடியாது.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fgreatche.files.wordpress.com%2F2010%2F03%2Fche-81.jpg%3Fw%3D300%26amp%3Bh%3D246%26amp%3Bh%3D246&hash=c228a0a7b8a1417f4077f1a76337b0c8e016bf46)
1960ல் எடுக்கப்பட்ட சேவின் பிரபல்யமான புகைப்படம்
அதிகாரம் புகழ் குடும்பம் மற்றும் வசதி ஆகிய அனைத்தையும் கொண்ட ஒரு மனிதர் எந்தவித கோபமோ தயக்கமோ இன்றி ஒரு இலட்சியத்திற்காக அனைத்தையும் துறக்கின்றார். தனது பெற்றோர்களுக்கு விடைபெறும் விதமாக எழுதிய கடிதத்தில் ஒரு கலைஞனுக்கே உரிய கவனத்துடன் நான் உரமேற்றி இருக்கும் என் மனவலிமை என்னுடைய பலவீனமான கால்களையும் களைத்துப்போன நுரையீரலையும் சுமந்து செல்லும் என்று குறிப்பிட்ட அவர் தான் நினைத்தது அல்லது விரும்பியது உடனே நடந்து விடவேண்டும் என்ற உணர்வுடன்தான் எப்போதுமே செயல்களைத் தொடங்குவார். அசாதாரணமான சாதனைகளையும் மிகச்சிறந்த வெற்றிகளையும் தேடித்தரக்கூடிய அந்த அசாத்தியமான மன உறுதிதான் சேவின் பயணங்களிலயும் அவரின் அரசியல் பார்வையிலும் அவரின் ராணுவ தலைமையிலும் மற்றும் பொருளாதார நிர்வாகத்திலும் வெளிப்பட்டது. எல்லையற்ற இம்மன உறுதியின் ஊற்றுக்கண்ணை விட அதன் தாக்கம் தான் முக்கியம் ஆனது. யோசித்து கூட பார்க்க முடியாத செயல்களை மேற்கொள்வதற்கும் மிகவும் தெளிவான ஈவு இரக்கமற்ற சுய பகுப்பாய்வை நடத்துவதற்கும் எர்னெஸ்ற்றோ குவேராவிட்கு இருந்த தன்னம்பிக்கையை ஒரு சில மனிதர்கள் மட்டுமே பெற்றிருக்கிறார்கள்.
இவ்வளவு புகழ்ச்சிக்கும் உரிய இந்த நாயகன் யார்? உலகமே இவரைக்கொண்டாட காரணம்? என்ன இன்று உலகில் பல அமைப்புக்கள் இவரை முன் மாதிரியாக கொண்டு இயங்கக் காரணம் என்ன?
பூர்வகுடிகளாக செவ்விந்தியர்கள் வாழ்ந்த மண்ணில், வந்து விழுந்தான் கொலம்பஸ். புதிதாக ஒரு நாட்டைக் கண்டு பிடித்துவிட்ட உற்சாக வெறி!ஆயிரக்கணக்கான ஸ்பானிய வீரர்கள், பூர்வகுடிகளை கூட்டம் கூட்டமாக வெட்டிச் சாய்த்தனர். எஞ்சியவர்களை அடிமையாக்கினர். பின்னர், ஸ்பானியர்கள் கூட்டம்கூட்டமாக கியூபாவில் குடியேறினர்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fgreatche.files.wordpress.com%2F2010%2F03%2Fbayofpigs.jpg%3Fw%3D300%26amp%3Bh%3D110%26amp%3Bh%3D110&hash=b7446c43bfd11f96780a84800695c53b0ae0ae44)
கியூபாவின் வரைபடம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fgreatche.files.wordpress.com%2F2010%2F03%2Fcuba_el_nicho.jpg%3Fw%3D300%26amp%3Bh%3D170%26amp%3Bh%3D170&hash=4d43e5da401ac048dc7c5c2ac17d0468fd636df9)
கியூபாவின் ஒரு பகுதி
உலகின் சக்கரைக் கிண்ணம் என்று வர்ணிக்கப்படும் நாடு. கிட்டத்தட்ட தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் ஸ்பானிய அமெரிக்கா எனக் குறிப்பிடும் அளவுக்குக் குடியேற்றம் நிகழ்ந்தது. கியூபாவின் வளத்தை ஸ்பானிய அரசு அட்டை போல் உறிஞ்சத் தொடங்கியது. இந்த அடிமை வாழ்வில் அவ்வப்போது புரட்சியின் தீப்பொறிகள் தோன்றி மறைந்தன.
1890ல் ‘ஹொஸே மார்த்தி’ எனும் கவிஞனின் தலைமையில் பூர்வகுடிகள் அணி திரண்டனர். புரட்சி துவங்கிய வேகத்திலேயே, ஸ்பானிய அரசு ஹொஸேவைச் சுட்டுக்கொன்று, புரட்சியை வலுவிழக்கச் செய்தது. ஆனால், மக்களின் நெஞ்சங் களில் அந்த நெருப்பு மட்டும் அணை யாமல் இருந்தது. புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா உதவி செய்ய ஸ்பானிஷ் ,அமெரிக்க யுத்தம் தொடங்கியது.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fgreatche.files.wordpress.com%2F2010%2F03%2Fbatista.jpg%3Fw%3D270%26amp%3Bh%3D270%26amp%3Bh%3D270&hash=8fc9742dba5d4d2c3a74f201a66eedf1cc70a5b9)
Fulgencio batista
1902ல் ஸ்பானிய அரசு விரட்டியடிக்கப்பட்டது. நல்லவராக வந்த அமெரிக்காவோ, கியூபாவில் ஒரு மாற்று ஆட்சியை ஏற்படுத்தி, அதன் பொருளாதாரத்தை உறிஞ்ச ஆரம்பித்தது. கடைசியாக கியூபாவை ஆண்ட ஃபெலன்சியா பாடிஸ்டா (Fulgencio batista) ஆட்சியில், இது உச்சக்கட்டமாக நிகழ்ந் தது. மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்தனர்.. ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் பிரதிநிதியாக உருவெடுத்தார். அதே வேகத்தில், காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டார். இது புரட்சிக் கனவுகளுக்குப் பேரிடி! ஆயினும், பாடிஸ்டா அரசின் மீதான எதிர்ப்பு காட்டுத் தீயாகப் பரவியது. எங்கே மக்கள் ஒன்றுசேர்ந்து புரட்சி நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம்கொண்ட பாடிஸ்டா அரசு, ஒரு மன்னிப்பின் பேரில் காஸ்ட்ரோவை விடுதலை செய்தது. பலமிழந்த சிங்கமாக காஸ்ட்ரோ வெளியே வந்தார். உடன் போராளிகள் இல்லை. ஆயுதங்கள் இல்லை. அடுத்து என்ன? புரட்சியின் கனவுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டதா?
வரலாற்றின் புதிய அத்தியாயம் அர்ஜென்ட்டினாவில் ஆரம்பமாகின்றது. கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் (Argentina) உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ் (Ernesto Guevara Lynch), சிசிலியா டெ ல செர்னா (Sisiliya de la Serna) தம்பதியர்களுக்கு முதல் மகனாக பிறக்கின்றார். அவர்கள் தங்களுக்கு பிறந்த தலைப்பிள்ளையை முத்தமிட்டு மகிழ்ந்தனர். அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா (Ernesto Guevara de la Serna) என பெயர் சூட்டினர்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fgreatche.files.wordpress.com%2F2010%2F03%2Fhis-childhood.jpg%3Fw%3D240%26amp%3Bh%3D154%26amp%3Bh%3D154&hash=cab383426eefd4abd181965db4ccb1abfecf417d)
குடும்பத்தினருடன்
அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது. சேவிற்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம். ‘சே’வுக்கு இரண்டு வயது இருக்கும். நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய், ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையை அழைத்துச் சென்றார். நடுக்கமூட்டும் குளிர் நதியில் தன் குழந்தையை அவர் நீராடவைக்க, ஈர உடையில் கிடுகிடுத்துக்கிடந்த குழந்தையின் நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி, ஆஸ்துமா அவரை இறுகப்பற்றியது. வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். ஆடுகளத்தில் பின்னிருந்து ஆடும் தடுப்பாட்டக்காரனின் நிலையிலேயே பெரும்பாலும் விளையாடுவார்.. இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு “பன்றி” என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.