FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 04, 2012, 09:09:03 AM

Title: காதலுக்கு கண் இல்லை
Post by: thamilan on March 04, 2012, 09:09:03 AM
காதலுக்கு கண் இல்லை
இது முன்னோர் சொன்னது
காதலுக்கு கண் இல்லை தான்

காதல் ஒரு உணர்வு
அதை புரிந்து கொள்ள
உணர்வுகளும், உணர்ச்சியுள்ள‌
இதயமும் தான் தேவை
கண்கள் தேவையில்லை

கண்கள் உள்ளவனை விட‌
இல்லாதவனுக்கே அறிவு அதிகம்
கண்களால் நாம் பார்ப்பதை அவன்
அறிவால் பார்க்கிறான்

காத‌லும் அப்ப‌டித் தான்
க‌ண்க‌ள் காணும் காட்சிக‌ள்
க‌ண‌நொடியில் அழிந்து விடும்
அறிவில் ப‌தியும் காட்சிக‌ள்
கால‌த்துக்கும் நிலைத்திருக்கும்

காத‌ல‌ர் பிரிந்தாலும்
காத‌ல் என்றும் நிலைத்திருக்கும்

கண்கள் ஒரே நேரத்தில் பலவித‌
காட்சிகளை பார்க்கும்
கண்கள் இல்லாதவன் சிந்தனை
ஒரே இடத்தில் தான் இருக்கும்

காத‌லும் அப்ப‌டித் தான்
காத‌லை த‌விர‌ காத‌லுக்கு
வேறெதும் தெரியாது.

ஜாதி ம‌த‌ம்
ஏழை ப‌ண‌க்கார‌ன்
குடும்ப‌ம் சொந்த‌ம்
இது எதுமே காத‌லுக்கு தெரிவ‌தில்லை

காத‌லுக்கு க‌ண் இல்லை
இல்லாம‌லேயே இருந்து விட்டு போக‌ட்டும்
அப்போது தான்
காத‌ல் காத‌லாக‌ இருக்கும்
Title: Re: காதலுக்கு கண் இல்லை
Post by: suthar on March 06, 2012, 08:11:30 AM
thamizhan kan thevaiya endru oru pattimandramey nadathi viteergal
Title: Re: காதலுக்கு கண் இல்லை
Post by: Global Angel on March 07, 2012, 12:07:42 AM
Quote
காத‌லும் அப்ப‌டித் தான்
காத‌லை த‌விர‌ காத‌லுக்கு
வேறெதும் தெரியாது.


காதலுக்கு கண் இல்லை என்றதுக்கு இப்படி ஒரு விளக்கம் நன்று தமிழன்
Title: Re: காதலுக்கு கண் இல்லை
Post by: ooviya on March 07, 2012, 07:23:55 AM
காத‌ல் காத‌லாக‌ இருக்க
ஆண்கள் எல்லோரும் குருடராக இருந்தால்
பெண்களின் கண்களில் கண்ணீர் வராது
நல்ல ஐடியா இல்லையா தமிழன்  ;D ;D ;D
Title: Re: காதலுக்கு கண் இல்லை
Post by: thamilan on March 07, 2012, 09:13:19 AM
ஓவியா
கண்ணை படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே
என கண்ணதாசன் தெரியாமலா கவிதை எழுதினான். ஆண்கள் எல்லோரும் குருடாய் இருப்பதை விட பெண்கள் எல்லோரும் அழகில்லாமல் இருந்தால் பிரச்சனையே இல்லையே.

அப்பவும் சில காமப் பிசாசுகள் பெண்களை விடாது. நீங்க சொல்வது போலவே இருப்பது தான் நலம்