FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JeGaTisH on November 27, 2017, 03:22:59 AM
-
காதலை நான் உனக்கு பரிசளித்தேன்
நீ எனக்கு கண்ணீரை பரிசளித்தாய்
வாழ்கை என்ற ஒன்றை
நீ வந்த வேளை அறிந்தேனடி
வலி என்ற ஒன்றை
நீ பிரிந்து வேளை அறிந்தேனடி
மார்போடு சாய்ந்தவள்
மாயமாகி போனால்
மனம் என்ன செய்ததடி
தினம் உன்னை நினைக்க
மறக்க ஒரு மனமில்லை
மணக்கோலம் புண்டுவிட்டேன்
மௌனமாக கொள்ளாத
மணதிட்குள் வந்து விடு
ஆசை முத்தம் இட்டு விடு
ஆயுட்கைதி ஆக்கிவிடு
அன்புடன் ஜெகதீஷ்
-
கவிதை அருமை தம்பி
தமிழின் சிறப்பு "ழ" "ல" "ள" "ர" "ற"
இதை இடம் மாற்றி சொன்னால் அர்த்தம் மாறுபடும்
நன்றி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் கவிஞரே !
-
எழுதி முடித்து சிறிது படுத்தும்பாருங்கள் வசப்படும்
படுத்து பக்காவா ????
கவிதை அருமை தம்பி
தமிழின் சிறப்பு "ழ" "ல" "ள" "ர" "ற"
இதை இடம் மாற்றி சொன்னால் அர்த்தம் மாறுபடும்
கவனம் தேவை
நிச்சயமாக அண்ணா நன்றி
-
நிச்சயமாக படுக்காமல் கண் விழித்து எழுதுவதால் வரும் வினை
ஒரே ஒரு சொல்லில் அர்த்தம் மாறியது புரிந்திருக்கும்
தவறை நான் திருத்தி விட்டேன் தம்பி
நீ ?
-
திருத்தி விட்டேன் அண்ணா
-
ஜெகா ஜோக்கர் சொல்வதில் கவனம் தேவை.
கவிதை அருமை.