FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on November 26, 2017, 09:29:54 AM
-
விழித்தெழாதவனுக்கு விடியல் இல்லை
விழித்திருந்து கனவுகாண்பவனுக்கு விடியல் தேவையில்லை
விழிகளில் பார்வையற்றவனுக்கு விடியலே தெரிவதில்லை
நீதியற்ற அரசியலில் நேர்மைக்கு விடியல் இல்லை
நிம்மதியாய் வாழ்வதற்கு விடியல்கள் போதவில்லை
இருண்டாலும் விடிந்தாலும் நாலு காசு இல்லையென்றால்
உயர்திணை மனிதனுக்கு ஒருபோதும் விடியல் இல்லை.
ஊரும் போய் உறவும் போய் விடியலை காத்திருக்கும்
நம் தேச மக்களுக்கு கனவுகளில் கூட விடியல் வருவதில்லை
-
இப்படி விடியல் இல்லை விடியல் இல்லை என்று சொல்லியே விழித்தெழாமல் தூங்கிகிட்டே இருங்க. தூங்குறவங்களும் தட்டி எழுப்புங்க மேடம் . அது தான் நம் இனத்துக்கு நாம் செய்யும் தொண்டு .
ஒரு ஜெகா கவிதையில் இருந்து ஒன்பது கவிதைகளா. கவிதை அருமை இனியவளே
-
நான் ஒரு பூ செடி நட்டேன்
அதில் இத்தனை பூக்களா
பரிமாணங்கள் பக்குவமாக
பதிய பட்டிருத்தது அருமை.
-
தமிழன் ftc யில் ஜெகா உட்பட யாருமே தூங்காம இரவு முழுதும் பேசிட்டுத்தானே
இருக்கோம். நீங்கதான் அங்க தூங்கிட்டே இருக்கீங்க.... சீக்ரம் நீங்களும் வந்துசேருங்க . நன்றி
ஜெகா தூங்கியிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிடிங்க. என்ன செய்ய.....மனசுல உதிச்சுது எழுதிட்டேன். நன்றி