FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on November 25, 2017, 07:46:53 PM

Title: ஜெகாவின் "சிந்தித்து செயலாற்றுங்கள்" கவிதையின் மறுபரிமாணம்
Post by: thamilan on November 25, 2017, 07:46:53 PM
நீலக் கடலில்
துயில் எழுந்த கதிரவனைப் பார்த்து
பனித் துளியில் குளித்த புல்லினம்
முகம் துடைத்துக் கொண்டது

இரவெல்லாம் காத்திருந்து
இளங்காலை வேளையில்
இரைதேடித் சென்றன
பறவை கூட்டங்கள்

விடிகாலைப் பொழுதில்
விடியலுக்கு காத்திருந்து
தூங்கும் மனிதனை
துயில் எழுப்பியது சேவல்

எழுந்த மனிதன்
விழுந்து கிடக்கிறான்
மீண்டும் படுக்கையில்

அஃறிணை  உயிர்கள் கூட
அதன் கடமையை செய்கிறது
உயர்திணை மனிதன் மட்டும்
உறங்கி கிடக்கிறான்

நிஜத்தை தொலைத்து விட்டு
கனவுக்குள் கரைந்து  போனவனுக்கு
இரவென்ன பகலென்ன
இரண்டும் ஒன்று தான்

விழித்தெழாதவனுக்கு
விடியலில்லை
Title: Re: ஜெகாவின் "சிந்தித்து செயலாற்றுங்கள்" கவிதையின் மறுபரிமாணம்
Post by: Niru on November 26, 2017, 01:58:57 AM
Jega un story pola theriyuthu  ;D
Title: Re: ஜெகாவின் "சிந்தித்து செயலாற்றுங்கள்" கவிதையின் மறுபரிமாணம்
Post by: JeGaTisH on November 26, 2017, 02:01:33 AM
வார்த்தை இன்றி மீண்டும் மீண்டும் படிக்கிறேன்

அருமை அருமை Tamilan அண்ணா


niru na ... chat la thane irupeenga ...varen