FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on November 22, 2017, 10:26:29 PM

Title: எனது மகன்
Post by: thamilan on November 22, 2017, 10:26:29 PM
மறந்து வைத்த மூக்குக்கண்ணாடியைத் தேட ......
செல்போனை  சார்ஜ் செய்து கொடுக்க ......
அவசரமாய் மளிகைச் சாமான் வாங்க .......
சோபாவினடியில் செருப்பெடுத்துக் கொடுக்க ......
துள்ளியோடி தொலைபேசியை எடுக்க .......
சாப்பிடும் சமயம் தண்ணீர் கொண்டுவந்து தர .....
மறந்திட்ட டவலை ஓடி எடுத்து வர  ......
இஸ்திரி துணியை விரைந்து வாங்கி வர......
கம்ப்யூட்டர் உபயோகம் சொல்லித் தர .....
லேட்டஸ்ட் சினிமா விபரங்கள் பல கூற......
அவசரத்துக்கு நண்பனாக, ஆபத் பாந்தவனாக .......
கூடவே இருந்து பெரும் தொண்டாற்றும்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்
Title: Re: எனது மகன்
Post by: joker on November 23, 2017, 11:38:27 AM
அருமை தோழா !

வாழ்த்துக்கள் உங்கள் கவி பயணம் தொடர