FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on March 02, 2012, 02:04:56 AM
-
சாதகப்பித்த்தம்
பித்தமே மனிதனின் உடல், உள்ளம், ஆன்மா இவற்றை சீராக இயக்கும் சக்தி கொண்டது எனக் கடந்த இதழ்களில் அறிந்தோம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த செயல்களைச் செம்மைப்படுத்தி உடலை இயங்கவைக்கும் பித்தமானது உடலில் பல பாகங்களில் இருந்துகொண்டு மேற்கண்ட செயல்களை நிறைவேற்றுகிறது. இதன் செயல்பாடுகள், இருக்குமிடம் ஆகியவற்றைக் கொண்டு ஐந்து பிரிவுகளாகப் பிரித்து அவற்றின் இயக்கம் மற்றும் தன்மை பற்றி தெளிவாகக் கூறியுள்ளனர் சித்தர்கள்.
அவை பாசகம், இரஞ்சகம், சாதகம், பிரகாசம், ஆலோசகம் என்பவையாகும்.
கடந்த இதழ்களில் பாசகம், இரஞ்சகம் என இருவகைப் பித்தத்தின் செயல்பாடுகளை விரிவாக அறிந்தோம்.
இந்த இதழில் சாதகப் பித்தத்தின் இருப்பிடத்தையும், செயல்பாடுகளையும் பற்றி அறிந்துகொள்வோம்.
சாதகப் பித்தம்
சாதகப் பித்தத்தை சாதனைப்பித்தம் என்றே கூறலாம். இது இதயத்திலிருந்து மூளை, வரை தொடர்புடையது.
மனம், புத்தி, ஆசை, பற்று, எண்ணம், செயல் இவற்றைச் சீர்படுத்தும் பித்தமாகும்.
பலப்பல சாதனைகளைச் செய்து வாழ்வின் வெற்றியாளனாக மாற்றுவது இந்த சாதகப் பித்தம்தான்.
எண்ணங்கள், கற்பனைகள், அவற்றை நிறைவேற்றும் தன்மையாவும் சாதகப் பித்தத்திற்கு உண்டு.
பித்தம் பிசகினால் பேசாமல் போய்விடும் சக்தி என அகத்தியர் குறிப்பிடும் பித்தம் இந்த சாதகப் பித்தம் தான்.
இது அறிவு, ஆற்றல், ஆன்மா இவற்றுடன் சம்பந்தப்பட்டது. எண்ணங்களின் வலிமையே செயல்களின் வெற்றி என்பார்கள். மனதை ஒருநிலைப்படுத்தி, எண்ணங்களைவலிமையாக்கி அல்லும் பகலும் அதுபற்றிய சிந்தனையை ஊட்டி அதை நிறைவேற்றும் சக்தி சாதகப் பித்தத்திற்குண்டு.
அபார ஞாபக சக்தி, தெளிந்த சிந்தனை, அசுர தைரியம், மன உறுதி, மன வேகம், யோகம், ஞானம், இறைநிலை போன்றவற்றைக் கொடுப்பது சாதகப் பித்தம்தான்.
இந்த சாதகப் பித்தமானது உடல் கூறுகளுக்கு தகுந்தவாறு உடலில் செயல்படுகிறது.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திடுவது சாதகப் பித்தம்தான். புதிய புதிய நவீன கண்டு பிடிப்புகளைக் கண்டுபிடிக்கத் தூண்டும் சக்தி இதற்குண்டு.
ஒருவரை தலைசிறந்த விஞ்ஞானியாகவும் சிறந்த பொருளாதார நிபுணராகவும், ஆன்மீக சக்தி பெற்ற ஞானியாகவும் திகழச் செய்வது சாதகப் பித்தம்தான்.
தலைசிறந்த எண்ணங்கள், தெளிவான சிந்தனை, அன்பான, கனிவான பேச்சுக்கள், எத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்கச் செய்யாத தன்மை, மனதில் உறுதி போன்றவற்றை உருவாக்கும் தன்மை சாதகப் பித்தத்திற்குண்டு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சாதகப் பித்தமானது பயம், அதீத கோபம், மன அழுத்தம், மன எரிச்சல், அதிக வேலைப்பளு போன்ற காரணங்களாலும், உடல் அலர்ஜியாலும், மன வேதனைகளாலும் சில நேரங்களில் மனநிலை தட்டுத்தடுமாறி தன் நிலையிலிருந்து மாறி மற்றொரு நிலைக்கு போய்விடுகிறது. இவ்வாறு நிலைமாறும்போது உடலும் மனமும் தடுமாற்றமடைந்து எந்த ஒரு செயலிலும் விருப்பமில்லாமல் வெறுப்புடன் இருக்கும் நிலையை உருவாக்கும். மேலும், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு பலவிதமான நோய்களுக்கு இட்டுச் செல்லும்.
புறச் சூழ்நிலையாலும், அகச் சூழ்நிலையாலும் உண்டாகும் பாதிப்புகளால் சாதகப் பித்தம் அலர்ஜி ஆகி அது மனம் சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்தி, உடலையும் பாதித்துவிடச் செய்கிறது.
பித்தத்தின் இதர பணிகள் பாதிக்கப்பட்டாலும் சாதகப் பித்தம் பாதிப்படையும்.
தியானம், மன அமைதி, சாந்தமான நிலை, இறைவழிபாடு இவற்றைக் கடைப்பிடித்து அளவான உணவு, எளிதில் சீரணமாகும் உணவு, போதிய ஓய்வு, நல்ல தூக்கம் இவைகளை மேற்கொண்டால் சாதகப் பித்தத்தை சீராக செயல்பட வைக்க முடியும்.
சரசுவாசத்தின் மூலம் மனதை ஒரு நிலைப் படுத்தி செயல்படுத்தினாலே சாதகப் பித்தம் சாதனைப் பித்தமாக மாறும்.