FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 02, 2012, 12:37:44 AM
-
உன்னை பிரசவிப்பது
உன் பெற்றோர் அல்ல
உன்னை நீயே தான்
பிரசவித்துக்கொள்ள வேண்டும்
வாழ்க்கை என்பதே
மனிதன் தன்னைத் தானே
பிரசவிக்க முயலும் முயற்சிதான்
ஆனால் இதில் அனேகம்
கருச்சிதைவு தான் நடக்கிறது
சிலர் செத்தே பிறக்கிறார்கள்
சிலர் பிறக்காமலே
செத்து விடுகின்றனர்
இந்த உலகிற்கு நீ
வெறும் வெள்ளைக் காகிதமாய்
வந்து சேர்ந்தாய்
அதில் நீ தான்
உன்னை எழுதிகொள்ள வேண்டும்
சிலர் இந்தக் காகிதத்தில்
கிறுக்கிறார்கள்
சிலரோ படித்து முடிந்த பின்
குப்பைக் கூடையில் எறியும்
எறியப்படும் கடிதமாகிறார்கள்
சிலர் மட்டும்
காலத்தால் அழியாத
கவிதை ஆகிறார்கள்
எச்சரிக்கை
உன்னை நீயே எழுதிக் கொள்
இல்லையென்றால் பிறரால்
நீ எழுதப்படுவாய்
-
எச்சரிக்கை
உன்னை நீயே எழுதிக் கொள்
இல்லையென்றால் பிறரால்
நீ எழுதப்படுவாய்
இதை சில காலத்துக்கு முன் எனக்கு சொல்ல யாரும் இலையே ......கிழிந்த காகிதமாய் நான் .
-
nice poem thamilan