FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on November 02, 2017, 07:09:26 PM
-
நீ பார்த்த பிறகு தான்
நான் அடிக்கடி
கண்ணாடி முன் நின்றேன்
நீ உச்சரித்த பிறகு தான்
என் பெயரே எனக்கு
பிடித்துப் போனது
நீ சிரித்த பிறகு தான்
என்னுள் சிறகுகள்
முளைத்திடக் கண்டேன்
நீ இயல்பானது தொட்ட பிறகு தான்
என்னுள் அனல் மின்நிலையம்
இருப்பதை அறிந்து கொண்டேன்
நீ பிரிந்த பிறகு தான்
செத்துக் கொண்டே
வாழவும் கற்றுக் கொண்டேன்
-
வணக்கம் தமிழன் அண்ணா
கவிதை பிரமாதம் ....
கவிதைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா
-
நன்றி ஜெகா
-
இப்போ உங்களுக்கு அங்கே இருக்கும் தாதிகளைப் பார்க்கும்போது
இப்படித்தான் கவிதை எழுத தோணும். பரவாயில்லை கவிதை
நல்லாத்தான் இருக்கு தாதி தான் பாவம். வாழ்த்துக்கள்
-
தமிழனின் தமிழ் கவிதை அருமை
"நீ இயல்பானது தொட்ட பிறகு தான்
என்னுள் அனல் மின்நிலையம்
இருப்பதை அறிந்து கொண்டேன் "
தூக்கத்திலே கரண்ட் வயர் தொட்டுடீங்கள் போல
பாத்துக்கோங்க :D :D :D ;)
-
வணக்கம் சகோ ...
கவிதை அருமை ...
அழகிய வரிகள் ....
வாழ்த்துக்கள் ...
நன்றி ..!!!
-
நீ பிரிந்த பிறகு தான்
செத்துக் கொண்டே
வாழவும் கற்றுக் கொண்டேன்
வர்ணிக்க வார்த்தை இல்லை அருமை