FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on July 21, 2011, 01:41:44 PM

Title: நறநற பழக்கமா?
Post by: Global Angel on July 21, 2011, 01:41:44 PM
நறநற பழக்கமா?



இரவுத் தூக்கத்தில் Frustration எனும் ஏமாற்றம் கொள்ளச் செய்யும் நிகழ்வுகளும், Suppressed anger எனும் ஒடுக்கப்பட்ட கோபமும், பற்களைக் கடிக்கச் செய்யலாம். இதுவும் மனதைச் சார்ந்தே இருப்பதால், ஆயுர்வேத மூலிகை மருந்தாகிய மஹாகல்யாணக கிருதம், பிராம்மீகிருதம் போன்றவற்றை, எது உகந்ததோ அதை ஆயுர்வேத மருத்துவரின் நல் உபதேசப்படி காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நிறைவான பலனை விரைவாகப் பெறலாம்.
சிலர் Agressivem personality எனும் வகையைச் சார்ந்தவராக இருப்பர். அதாவது பிறர் மீது ஏற்படும் வெறுப்பு, கோபம் ஆகியவற்றை அவர் முன்பே காண்பிப்பதுடன் நிற்காமல், இரவிலும் அதைத் தொடர்வதால் பற்களைக் கடிப்பார்கள். மனதைச் சாந்தப்படுத்தும் சில ஆயுர்வேத சிகிச்சைமுறைகளான சிரோவஸ்தி எனும் மூலிகைத் தைலத்தை தலையில் நிறுத்தி வைத்தல், சிரோதாரா எனும் மூலிகைத் தைலத்தை தலையில் ஊற்றுதல் போன்றவற்றைச் செய்து கொள்வது நல்லது.
Abnormal allignment of teeth எனும் பற்களின் வரிசைக் கிரமம் சீராக இல்லாமல் இருப்பதாலும் பற்களை இரவு தூக்கத்தில் கடிக்கலாம். இதை ஒரு பல் மருத்துவரால் மட்டுமே சரி செய்ய இயலும். பற்கள் ஒன்றுடன் ஒன்று உரசாமல் இருப்பதற்கான Night mouth guards என்னும் பல் கவசங்கள் தற்சமயம் வந்துள்ளன.
உடலில் ஏற்படும் வேறு சில உபாதைகளாலும் சிலர் பற்களைக் கடிப்பதுண்டு. உதாரணத்திற்குப் பார்க்கின்ஸன்ஸ் நோய் எனும் நரம்புகளை வலுவிழக்கச் செய்து, உடல் அங்க அசைவுகளை முடக்கும் உபாதையில் Bruxism எனும் பற்களைக் கடிக்கும் உபாதை ஏற்படுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பார்க்கின்ஸன் உபாதை நீங்குவதால், இந்த உபாதையும் நீங்கிவிடும்.
மனதைச் சார்ந்த உபாதைகளை மாற்றும் மாத்திரைகள், செயற்கையான மன அமைதிதரும் டிரான்க்விலைஸர் மருந்துகள் சாப்பிடுபவர்களிடமும் இரவில் பற்களைக் கடிக்கும் பிரச்னை சிலரிடம் ஏற்படுகிறது. இதை மிகக் கவனமுடன் சரி செய்ய வேண்டும். மானஸ்மித்ரம் எனும் ஆயுர்வேத மருந்து உதவக்கூடும்.
வயிற்றில் புழு பூச்சி இருந்தால் சிலர் பற்களை இரவில் கடிப்பார்கள். அவற்றை நீக்கும் வாயுவிடங்கம் சாப்பிட, இந்த உபாதை நீங்கிவிடும்.

படுக்கும் முன் ஆப்பிள் பழத்தைக் கடித்துச் சாப்பிடுவதுஅல்லது கேரட் ஒன்றைக் கடித்துச் சாப்பிடுவது போன்றவற்றால் முகத்தைச் சார்ந்த தசைநார்கள் இறுக்கம் தவிர்க்கப்பட்டு, அவை லேசாக ஆகிவிடுவதால், பற்களைக் கடிப்பது குறையலாம். படுக்கும் முன் வெதுவெதுப்பான வெந்நீரில் போட்டுப் பிழிந்தெடுத்தத் துணியை முகச் சதையின் மீது போட்டு உறங்குவதாலும் இப்பிரச்னையைச் சமாளிக்கலாம். படுக்கும் முன் வெதுவெதுப்பான நீரில் குளித்து, உடலைப் பிடித்துவிடச் சொல்வதும் நல்லதே.
மல்லாந்து படுத்து உறங்குவதன் மூலம் பற்களைக் கடிப்பதைக் குறைக்கலாம். வெதுவெதுப்பான அல்லது சூடான மூலிகை டீயைப் படுக்கும் முன் குடிக்கலாம். ஆனால் மதுபானம் கூடவே கூடாது. கால்சியம், மெக்னீசியம் சத்துள்ள மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட இந்த உபாதையைக் குறைக்கவும், பின் விளைவுகளைத் தவிர்க்கவும் செய்யலாம். படுக்கையில் அமர்ந்து மூச்சுப் பயிற்சியைச் சில நிமிடங்கள் செய்வதன் மூலம் தசை நார்கள் தொய்வு நீங்கி நிம்மதியான உறக்கம் பெறுவதன் வாயிலாகவும் பற்களைக் கடிப்பதைத் தவிர்க்கலாம்.