FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on February 29, 2012, 12:30:12 PM
-
சலனமற்று
இருந்த
என்னுள்
அடைமழையின்
முதல்
துளியாய்
நீ!!
...............................
மண்வாசனையை
எழுப்பி
விளையாடும்
சிறு மழையாய்
தூக்கங்களை
எழுப்பிவிட்டு செல்கிறாய்
உன்
சில நிமிட
கனவுகளில்!
.............................................
சில நிமிட
மௌனங்களில்
நம்மைச்சுற்றி
ஓராயிரம்
கவிதை
பட்டாம்பபூச்ச்சிகள்!
....................................
குளிர்கால
இரவுகளில்
கதகதப்பாய்
போர்த்தி விட்டு
செல்கின்றன
உன்
நினைவுககள்!!!
..................................
எப்பொழுதும்
மழையில் நனைந்து
விளையாடும்
நான்
இப்பொழுதெல்லாம்
ஓளிந்துக்கொள்கிறேன்
உன் முத்த ஈரங்கள்
அழிந்து விடுமோ
என்று!!!