FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: suthar on February 29, 2012, 01:38:45 AM

Title: முதல் இரவு
Post by: suthar on February 29, 2012, 01:38:45 AM
முதல் இரவு
தனி அறை
கண்ணை பறிக்கும் மின் விளக்கு
அறைக்குள் நுழையும் எனக்குள் குழப்பம்

தனியாக கையாள  முடியுமா என்ற கலக்கம்
மனதில் எதிர்பார்ப்புடன் கூடிய பயம் படபடப்பு
இதயமே நின்றுவிடும் அளவிற்கு துடிதுடிப்பு

அறையினுள்ளே குளிசாதன பெட்டியின் சிலிர் காற்று
நறுமணம் கமழும் ரோஜா மலரின் மனம்
அங்கோ ஓர் மூலையில் சலனமுற்று கிடந்த
அவளை காண

என்னானதோ என்ற தவிப்போடு மெல்ல தட்ட
அவள் உயிர்த்தெழ
விழி திறந்தவள் என்னை பார்க்க
நான் அவளை பார்க்க

பயம் போய் ஆர்வம் என்னை தொற்றி கொள்ள
விரலால் வீணை மீட்ட தொடங்க
ஒவ்வொரு மீட்டலுக்கும் தீண்டலுக்கும்
மகுடிக்கு ஆடும் பாம்பை போல்
இசைந்து  நாதம் மீட்டிட

என்னை சோர்வு ஆட்கொள்ள
சோர்வில் செய்த தவறுக்கு ஒலி(அலாரம்) எழுப்பி
என் தவறை திருத்த
வித்தைக்கு கட்டுப்பட்டு இயந்திரங்கள் சீராக இயங்க

பொழுது புலரும் தருணம்
உறக்கம்  கண்ணை பற்றி கொள்ள
எப்படியோ முதல் இரவை கடத்தி விட்டோம்
வென்றுவிட்டோம் என்ற ஆனந்த
களிப்போடு வெளியேறினேன்

வருகின்ற இரவெல்லாம்  முதல் இரவை போல்
அல்லாமல் கைதேர்ந்தவனாக
நான் விரல் மீட்டுவது தானியங்கும் தொழிற்சாலை
கணினியின் விசைபலகையை ..........!!!
Title: Re: முதல் இரவு
Post by: aasaiajiith on February 29, 2012, 11:24:03 AM
Nalla varigal

Thaniththuvaththai thavirthirukalaam ?
Title: Re: முதல் இரவு
Post by: suthar on February 29, 2012, 06:42:23 PM
Nalla varigal

Thaniththuvaththai thavirthirukalaam ?
endraal vilangum padi kooru nanba
nan konjam tube lite......
Title: Re: முதல் இரவு
Post by: aasaiajiith on February 29, 2012, 06:46:02 PM

பின் குறிப்பை -  தவிர்த்திருக்கலாம்
Title: Re: முதல் இரவு
Post by: suthar on March 01, 2012, 01:35:20 AM
ajith vendu kolukinanga pin kurippu neeka patathu
Title: Re: முதல் இரவு
Post by: aasaiajiith on March 01, 2012, 07:37:40 AM
Adadaaa !
Aatchi maatraththil pala maatram nigazhndhadhu
arindha ondru dhan,Therindha ondru dhaan

"KaruththU" porul thirindhu "Veindukoal" aanandhu endruu ????

Vivavaram arindhavar Vivaramaai Viraivippeergala????