FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on February 28, 2012, 04:52:33 AM

Title: வேண்டும்....
Post by: Global Angel on February 28, 2012, 04:52:33 AM
வேண்டும்....

என்னோடு பேச ஓர் இதயம் வேண்டும் ...
எனக்காக துடிக்க ஒரு இதயம் வேண்டும் ...
எல்லாமுமாக ஓர் இதயம் வேண்டும்
என் இன்பத்தை கூட்ட ஓர் இதயம் வேண்டும்
என் துன்பத்தை போக்க ஓர் இதயம் வேண்டும்

உன்னை மட்டும் காண ஒளி மங்கா கண் வேண்டும்
என்னை மட்டும் ரசிக்கும்  அன்பான கண் வேண்டும்
அழகை மட்டும் பாராது அகம் நோக்கும் கண் வேண்டும்
அன்போடு எனை நோக்கும் அகம் கொண்ட கண் வேண்டும்

என் வாசம் நுகரும் எடுப்பான நாசி வேண்டும்
இதழ் சேரும் போது தடுக்காத அளவு வேண்டும் ..
மூகோடு முகம் சேர்த்து முகம் உரசும் இதழ் வேண்டும்
முனு முன்னுக்கும் என் இதழ் மூட முரடான இதழ் வேண்டும்

உடல் சோரும் போது சுமை தாகும் உள்ளம் வேண்டும்
கண் அணை      மீறும்  போது அதை துடைக்கின்ற கரம் வேண்டும்...
என் துயர்  கண்டு துடிக்கின்ற இதம் வேண்டும்
தூணாக தாங்கும் தோள் ஒன்று வேண்டும் ..

கரை காணா காதலில் களிக்கின்ற சுகம்  வேண்டும்
கரை சேர திருமணம் செய்யும் திடம் கொண்ட காதலன் வேண்டும்
கண்மூடி துயில் கொள்ள  அணையாக மடி வேண்டும் ...
துயில் கொள்ளும் நேரம் துவளாத உன் நெஞ்சம் வேண்டும் ...

வாழ்க்கை எனும் ஓடத்தில்
வாழ்க்கை துணையாக ஓர் துணை வேண்டும்
முதுமை சூழ்ந்தாலும் முடியாமல் போனாலும்
உன் முகம் சோரா வரம் வேண்டும் ....
உன்னோடு வாழ பல யுகம் வேண்டும்
உனக்காக மட்டும் ஏங்கும உள்ளம் வேண்டும்
உறவாக உன் மனம் வேண்டும்
உன்னை நீங்கினால் உயிர் வாழா வரம் வேண்டும்
என் இழப்புகள் தீர இவை எல்லாம் நிறைவேற வேண்டும் ..
என் கனவுகளிலாவது ....